சென்னையில் நாளை கூடுகிறது அதிமுக பொதுக்குழு- கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Recommended Video
அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தனர். ஆனால் அதிமுகவை பாஜக தலைவர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.
முதல்வர் காருக்கு பின், வேகமாக அணிவகுத்த கார்கள்.. குறுக்கே வந்த மாடு.. தூத்துக்குடி அருகே விபத்து
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் 38 தொகுதிகளை பாஜக கேட்டு பட்டியல் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை அதிமுக தலைமை திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதனிடையே அதிமுக அணியில் பாமக, தேமுதிக நீடிக்கிறதா? என்கிற குழப்பமும் தொடருகிறது.
அதிமுக பொதுக்குழு
தற்போதைய நிலையில் அதிமுக கூட்டணி தொடரும் என தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமே திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளர்
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். மேலும் பாமக, தேமுகவை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பான விவாதங்களும் பொதுக்குழுவில் நடைபெற வாய்ப்புள்ளது.
சசிகலா விவகாரம்
அதேபோல் வரும் 27-ந் தேதி பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாக உள்ளார். அவரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாகவும் பொதுக்குழுவில் விவாதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.