"ஆரம்பிக்கலாங்களா" மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன் வறுவல்.. அதிமுக பொதுக்குழுவில் பிரம்மாண்ட விருந்து
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக களமிறங்கி பணிகளை தொடங்கிவிட்டனர். கடந்த காலங்களில் இல்லாதளவுக்கு அதிமுகவில் தற்போது உள்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் இது அந்தக் கட்சியினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். பொதுவாக தேர்தல் பணிகளில் அதிமுக மற்ற கட்சிகளைவிட அதிகம் வேகம் காட்டும். ஆனால் அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகளவில் இருப்பதால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு செயற்குழு
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் எழுந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். தொடரும் பிரச்சனைகளால் சில மூத்த நிர்வாகிகள் திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தலைமை உள்ளது. இந்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது. சென்னை வானகரம் ஶ்ரீவாரு வெகங்டாசலபதி மண்டபத்தில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் காலை 10 மணியளவில் அந்தக் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

கமகம விருந்து
இதில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 5,000 பேர் பங்கேற்கவுள்ளனர். தேர்தல் வியூகம், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளது. முக்கியமாக பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கமகம அசைவம் மற்றும் சைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 3,000 பேருக்கு சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 2,000 பேருக்கு சைவ உணவும், 3,000க்கும் மேற்பட்டோருக்கு அசைவ உணவும் தயாரிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு அவர்களின் இருக்கையிலேயே ஸ்வீட், காரம், பிஸ்கட், குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.
காலை உணவு
1. கேசரி
2. வடை
3. பொங்கல்
4. இட்லி
5. சாம்பார்
6. கார சட்னி
7. தேங்காய் சட்னி
8. காபி, டீ
சைவ உணவு பட்டியல்
1. தம்ஃப்ரூட் அல்வா
2. புடலங்காய் கூட்டு
3. சைனீஸ் பொரியல்
4. மாவடு இஞ்சி
5. நிலக்கடலை மண்டி
6. பிளாக்காய், உருளை மசாலா
7. பருப்பு வடை
8. அப்பளம்
9. ஊறுகாய், மோர் மிளகாய்
10. வெஜ் பிரியாணி - தயிர் பச்சடி
11. வெள்ளை சாதம்
12. கத்திரி - முருங்கை - பீன்ஸ் சாம்பார்
13. வத்தல் குழம்பு
14. தக்காளி ரசம்
15. தயிர்
16. பருப்பு பாயாசம்
17. வாழைப்பழம்
அசைவ உணவு
1. பிரட் அல்வா
2. மட்டன் பிரியாணி
3. தாளிச்சா
4. வெங்காயம் தயிர் பச்சடி
5. கத்தரிக்காய் கட்டா
6. மட்டன் குழம்பு
7. சிக்கன் 65
8. வஞ்சரை மீன் வறுவல்
9. முட்டை மசாலா
10. வெள்ளை சாதம்
11. தக்காளி ரசம்
12. தயிர்
13. இஞ்சி புளி மண்டி
14. பருப்பு பாயாசம்
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications