விஜிபி ரிசார்ட்டில் பணிகள் நிறுத்தம்.. சென்னை வானகரம் திருமண மண்டபத்திலேயே மீண்டும் அதிமுக பொது குழு
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்தும் ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே அதிமுக பொதுக் குழுவை நடத்திக் கொள்ள நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு கடந்த 14 ஆம் தேதி எழுந்தது. அன்று முதல் அதிமுகவில் தினந்தோறும் திருப்பங்களும் ட்விஸ்ட்களும் நடைபெறுகின்றன.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்குவதற்கு கூட வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு 23 தீர்மானங்களை நிராகரித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

நிரந்தர அவைத் தலைவர்
இந்த நிலையில் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். அவரிடம் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம், "ஒற்றைத் தலைமை தேவை என பொதுக் குழு உறுப்பினர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளார்கள். எனவே ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க மீண்டும் பொதுக் குழு கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்த பொதுக் குழு கூட்டம்
இதைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுக் குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதையடுத்து அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடத்தும் ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுக் குழு
அடுத்த மாதம் நடைபெற்ற உள்ள பொதுக் குழுவை வானகரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு நடத்தாமல் மாற்று இடத்தை நிர்வாகிகள் தேர்வு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து மீனம்பாக்கம், ஒஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடத்தலாம் என பரிசீலிக்கப்பட்டது.

கிழக்கு கடற்கரைச் சாலை
பின்னர் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் விஜிபி ரிசார்டில் பொதுக் குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பொதுக் குழு நடைபெறும் இடத்தை தயார் செய்யும் பணிகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் அந்தப் பணிகளை பார்வையிட்டனர்.

ஈசிஆர் விஜிபி அதிமுக பொதுக் குழு
இந்த நிலையில் ஈசிஆர் விஜிபியில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்தும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடு இருப்பதால் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் இடம் தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திலேயே மீண்டும் பொதுக் குழுவை நடத்தி கொள்ள நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications