திரும்பிய பக்கமெல்லாம் அடி! திணறும் ஓபிஎஸ்! அடுத்த பிளான் என்ன! கு.ப.கிருஷ்ணன் சொன்னதை நோட் பண்ணுங்க
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கு.ப. கிருஷ்ணன் தங்கள் அடுத்தகட்ட திட்டம் குறித்து விளக்கியுள்ளார்.
அதிமுகவில் பல மாதங்களாக எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்தது. இதில் பெரும்பாலும் எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் ஓபிஎஸ் மனுவை நிராகரித்த நீதிமன்றம், தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடையையும் நீக்கியது.

கு ப கிருஷ்ணன்
நீதிமன்ற தீர்ப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான கு.ப. கிருஷ்ணன் தங்கள் அடுத்தகட்ட திட்டம் குறித்து விளக்கியுள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இரு தரப்பும் தங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எடுத்துரைத்துள்ளனர். நமது நாட்டில் நீதியைப் பெற நீண்ட காலம் ஆகும். இந்தியாவின் சட்ட அமைப்புகள் அப்படித்தான் இருக்கிறது.

அடுத்த திட்டம்
ஒற்றை நீதிபதி ஒரு தீர்ப்பு, அமர்வு ஒரு தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பும் என்று வழங்குவது இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், நீதி என்பதை வாங்க முடியாது. சிலர் நீதியை வாங்க முயல்கிறார்கள். நீங்கள் நீதியைப் பெறவே முயல்கிறோம். நாங்கள் நடத்துவது மிகப் பெரிய சட்டப் போராட்டம். இதில் நாங்கள் ஒவ்வொரு படியாக ஏறி நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

சுப்ரீம் கோர்ட் போவோம்
இரு நீதிபதி அமர்வில் நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும். அங்கும் எங்களைக் கைவிரித்தால், சுப்ரீம் கோர்டிற்கு போவோம். சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில், அவர்கள் சிவில் நீதிமன்றத்தில் சென்று முறையிடச் சொன்னார்கள். அதன்படியும் நாங்கள் செய்துள்ளோம். அங்கும் விசாரணை விசாரணையை நியாயமாக நடந்து எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்க வாய்ப்பிருக்கிறது. இதனால் சட்டப் போராட்டத்தை நீண்ட காலம் நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோம்.

கொங்கு மண்டலம்
அதிமுக பொதுச்செயலாளராக இருந்து எடப்பாடி என்ன சாதித்துள்ளார். கொங்கு மண்டலத்திலேயே அதிமுக வாக்குகள் குறைந்துள்ளது. அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது என்றால் ஏன் இப்படி. எடப்பாடி கையில் சென்ற பிறகு அதிமுக 8 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது. அதிமுக கோட்டை என்று சொன்ன ஈரோட்டில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா
அவர் தான் கொங்கு மண்டலத்தின் தலைவர் என்று சொல்லிக் கொண்டார். அதிமுக வெல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுகவைப் போலப் பலமான கட்சி எதுவுமில்லை என்பதை நாம் மக்களுக்குக் காட்ட வேண்டும். 1989இல் ஆரம்பித்த நமது வெற்றி பயணம் தொடர வேண்டும். எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தைத் திருத்த வேண்டாம் என்று தான் நாங்கள் சொல்கிறோம். ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர்." என்று அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications