பொங்கல் பண்டிகை அதுவுமாக! விடை பெறுகிறேன்! அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கோவை சத்யன்
சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐடி விங்) தலைவர் கோவை சத்யன் சிறிது காலம் சமூகவலைதள பக்கங்களில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் ஐடி விங் என்பது மிகவும் முக்கியத்துவமானது. அதாவது நவீன டிரென்டிற்கேற்ப கட்சியின் வளர்ச்சி, ஆளும் கட்சி மீதான விமர்சனம், சமூக பிரச்சினைகளை விவாதிப்பது உள்ளிட்டவற்றை சமூகவலைதளங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா, உள்ளிட்டவைகளில் கொண்டு சேர்க்க வேண்டும்.

அந்த வகையில் அதிமுகவின் ஐடி விங் தலைவராக இருந்தவர் கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரன். இவர் சமூகவலைதளங்களில் சரிவர செயல்படுவதில்லை என்றும் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையை கூட அவர் சமூகவலைதளங்களில் வெளியிடுவதில்லை என்றும் அதிமுக தலைமைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து அதிமுக ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமசந்திரனை விடுவித்துவிட்டு கோவை சத்யனை தலைவராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அவர் பொறுப்பேற்றதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் குறித்த செய்தி வெளியானது.

உடனே அந்த விவகாரத்தை கையிலெடுத்த கோவை சத்யன், இந்த விவகாரத்தில் ஆளும் அரசின் மீதான விமர்சனங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்றார். இதனால் யார் அந்த சார் என்ற கேள்வியை அதிமுகவின் நிர்வாகிகள் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் கோவை சத்யன் இன்னும் சில மாதங்களுக்கு சமூகவலைதள பக்கங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறியிருப்பதாவது: விடை பெறுகிறேன். டிவிட்டர், இன்ஸ்டா, முகநூல் மற்றும் திரெட் சமூக வலைதளங்களில் இருந்து சில மாதங்கள் விலக முடிவு செய்துள்ளேன். மீண்டும் சந்திக்கும்வரை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications