மூச்சுக்கு மூச்சு தமிழ்.. ஆனா நடவடிக்கை இல்லை.. “இதுதான் உங்க திராவிட மாடலா?” - விளாசிய ஓபிஎஸ்!
சென்னை : தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிடாத திமுக அரசின் நடவடிக்கை சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது போல் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு, தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிடாமல் இருப்பதா என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடாமல் இருப்பதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மொழியை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலும், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறிக் கொள்வதிலும் முனைப்புக் காட்டும் முதல்வர், தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கும் முதல்வர், தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் சட்ட விதிகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கின்றாரா என்றால் இல்லை.

தொழிலாளர் சட்டங்கள்
மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கி நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உருவாக்கி உள்ளதன் அடிப்படையில், பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், ஊதிய சட்டத் தொகுப்பு விதிகள், தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு விதிகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு விதிகள் ஆகிய மூன்று சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகள் தமிழக அரசின் அசாதாரண அரசிதழில் 11-04-2022 அன்று ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான தமிழாக்கம் வெளியிடப்படவில்லை.

ஏமாற்றம் தான் மிச்சம்
இந்தச் சூழ்நிலையில், ஊதிய சட்டத் தொகுப்பு விதிகள் மற்றும் தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு விதிகள் குறித்த தொழிற் சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்ற மாத இறுதியில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றதாகவும், கூட்டத்திற்கான அறிவிப்பு தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தால் தமிழில் அனுப்பப்பட்ட நிலையில், மாநில வரைவு விதிகளின் தமிழாக்கம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த தொழிற்சங்கங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

சம்பிரதாய கூட்டமா
தமிழ் மொழியில் மாநில அரசின் வரைவு விதிகள் வழங்கப்பட்டால்தான், 29 தொழிலாளர் சட்டங்களை உள்ளடக்கிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்றும், மாநில வரைவு விதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை ஒவ்வொரு தொழிலாளியும், தொழிற்சங்கங்களைச் சார்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவை தமிழில் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும் என்றும், அப்பொழுதுதான், சட்டத் தொகுப்புகளில் உள்ள முக்கிய அம்சங்களைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தொழிலாளர் நல அதிகாரிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனைகளைத் தெரிவிக்க முடியும் என்றும், சம்பிரதாயத்திற்காக கூட்டத்தைக் கூட்டுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தொழிலாளர்களும், தொழிற்சங்கவாதிகளும் கூறுகின்றனர்.

மூச்சுக்கு மூச்சு
ஆங்கிலத்தில் ஐம்பது பக்கம், நூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் ஒவ்வொரு தொகுப்பையும் சாதாரண தொழிலாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் படித்து புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்று. மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டு, தொழிலாளர்களுக்கான சட்டத் தொகுப்புகளை தமிழில் வெளியிடாத திமுக அரசின் நடவடிக்கை 'சொல்வது ஒன்று செய்வது ஒன்று' என்பது போல் உள்ளது. ஒரு வேளை இதுவும் 'திராவிட மாடல்' போலும். தி.மு.க அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழாக்கத்தை வெளியிடுங்கள்
எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேற்படி மூன்று மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடவும், இனி வருங்காலங்களில் ஆங்கில விதிகள் வெளியிடப்படும் அதே சமயத்தில் அதற்கு இணையான தமிழாக்கம் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications