மதுரை விமான நிலையம்.. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர்.. முதல்வரின் 'க்ளெவர்' ஸ்டிராடஜி!
சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயர் சூட்டப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அப்படி இப்படி என்று கூட்டிக்கழித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 20 நாட்களே கட்சிகளை கையில் உள்ளன.
இந்நிலையில், திமுக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று அதிமுக தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முத்துராமலிங்க தேவர் பெயர்
மதுரை விமானநிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படுமா? என்ற கேள்வி பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா நடக்கும் போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சியினரும் தவறாமல் ஆஜாராகிவிடுவார்கள். ஒவ்வொருமுறை முறையும் அங்கு வரும் தலைவர்களிடம், இந்த ஏர்போர்ட் பெயர் கோரிக்கை வைக்கப்படும்.

அதிர்ந்த மதுரை
குறிப்பாக, 2019ல் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை ரவுண்டானாவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியது பெரும் கவனம் பெற்றது. மதுரையின் முக்கிய சாலையில் போராட்டம் நடைபெற்றுதால் அப்போது போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அடிக்கடி இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரயில்களும் மறிக்கப்படுவது வழக்கம்

அரசியல் பேச விரும்பவில்லை
அதே 2019ம் ஆண்டு பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்கத்தேவர் 112வது ஜெயந்தி விழா, 57-வது ஆண்டு குருபூஜை விழாவிற்கு வந்த முதல்வர் பழனிசாமியிடம், மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்டப்படுமா' என நிருபர்கள் கேட்டதற்கு, "அரசியல் பேச விரும்பவில்லை" என்று கூறிச் சென்றார்.

சூட்டை தணிக்கும் முயற்சி
இப்போது, அதே கோரிக்கையை நிறைவேற்று விதமாக, அதிமுக தேர்தல் அறிக்கையில் சேர்த்து, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே, வன்னியர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அறிவித்த முதல்வர் மீது முக்குலத்தோர் சமுதாயம் அதிருப்தியில் இருந்த நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் லைட்டாக தன் மேல் இருந்த சூட்டை தனித்திருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications