ஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்கள்... நமது அம்மா விமர்சனம்
சென்னை: அதிமுக ஒன்றும் மன்னார்குடி மாஃபியாக்கள் திறந்து வைத்திருக்கும் லாலா கடையல்ல என அக்கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடான நமது அம்மா தெரிவித்துள்ளது.
மேலும், அமமுக பொதுச்செயலாளர் தினகரனை ''திகார்கரன்'' என நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது.
காளான் அல்ல காவியம் என்ற தலைப்பில் சித்ரகுப்தன் என்ற பெயரில் இந்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.

கட்சியின் மனசாட்சி
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சின் மனதில் உள்ளதை பிரதிபலிக்கும் வகையில் செய்திகளும், கருத்துகள் வெளியிடப்படுவது வழக்கம். இந்நிலையில் சசிகலா பற்றியும் அவரது உறவினர்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தினகரன் மீது பாய்ச்சல்
காளான் அல்ல காவியம் என்ற தலைப்பில் சித்திரகுப்தன் வெளியிட்டுள்ள கவிதையில், தினகரனை ''திகார்கரன்'' என்றும், பூத் ஏஜெண்டு கூட நியமிக்க வக்கில்லாதவர் எனவும் கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சிக்கப்பட்டுள்ளது.

சசிகலா உறவினர்
பாஸ்கரனுக்கு ஒரு கட்சி, சுதாகரனுக்கு ஒரு கட்சி, திவாகரனுக்கு ஒரு கட்சி, தினகரனுக்கு ஒரு கட்சி, என மாஃபியாக்கள் திறந்து வைத்திருக்கும் லாலா கடையல்ல அதிமுக எனவும் சாடியுள்ளது நமது அம்மா நாளிதழ்.

பெயிலில் காலம்
ஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்களால் அதிமுகவை அழிக்க முடியாது என்றும், கழகத்தை உதிரத்தை உறிஞ்சி கொழுக்கலாம் என இனி கனவு கூட காண முடியாது எனவும் சசிகலா, தினகரன் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications