உங்களுக்கு இருக்கா சூடு சொரணை.. ஸ்டாலின் மீது வைத்திலிங்கம் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாக்டர் ராமதாஸை பார்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூடு சொரணை இருக்கா என்று கேட்கிறார். ஆனால் உண்மையில் திமுகவுக்கு சூடு சொரணை இருக்கா என்று கேட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் 120 ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, வளர்மதி முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏடாகூடமான பேச்சு

ஏடாகூடமான பேச்சு

இதில் கலந்து கொண்டவர்கள் ஏடாகூடமாகவே பேசினர். குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது காசு கொடுத்து கூட்டிய கூட்டணி என்று மறைமுகமாக கூறி அதிர வைத்தார்.

வைத்தியலிங்கம் பேச்சு

வைத்தியலிங்கம் பேச்சு

அதேபோல அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசும்போது, ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். "இன்னைக்கு ராமதாஸ் அவர்களை சூடு சொரணை இருக்கிறதா என ஸ்டாலின் கேட்கிறாரே என்று ஆரம்பித்து கடுமையாக விமர்சித்தார்.

காலில் விழுந்தீங்களே

காலில் விழுந்தீங்களே

அவர் கூறுகையில், நான் கேட்கிறேன்... ராஜாஜி, இந்திரா, ராஜீவ் மற்றும் பாஜக காலில் இதுக்கு முன்னாடி விழுந்து கூட்டணி வைத்தது திமுக... உங்களுக்கு சூடு சொரணை இருக்கிறதா?

புத்தி பேதலித்து விட்டதா

புத்தி பேதலித்து விட்டதா

கூட்டணி அமையாததால் புத்தி பேதலித்து ஸ்டாலின் பேசி வருகிறார். திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு டெபாசிட்டே கிடைக்க கூடாது, இதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கடமை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+