டபுள் சிக்னல் தந்த சசிகலா.. எடப்பாடியை திணற செய்யும் மெசேஜ்.. "வெள்ளை கொடி"க்கு வேலை வந்துருச்சே
அதிமுகவுக்கு சசிகலா ஆதரவு தெரிவித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: பாஜகவும் இல்லாமல், பாமகவும் இல்லாமல், வேறு யாருமே இல்லாமல் தனித்து போட்டியிடும் அதிமுகவுக்கு, ஒரு சூப்பர் மெசேஜ் தந்துள்ளார் சசிகலா..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க போகிறது.. இந்த தேர்தலுக்கு திமுக கூட்டணியும், அதிமுகவும் போட்டியிட தயாராகிவிட்டன.. பாஜக, பாமக, தேமுதிக என எல்லாருமே தனித்தனியாக போட்டியிட போகிறார்கள்.
ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களை பெற்ற அமமுகவும், இந்த முறை தேர்தலில் வெற்றியை பெற தீவிரமாகி உள்ளது..

தினகரன்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கே, சசிகலாவை மலைபோல் நம்பினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.. ஆனால், கடைசிவரை அமமுகவுக்கு ஆதரவை சசிகலா தரவே இல்லை.. பிரச்சாரத்துக்கும் செல்லவில்லை.. அமமுகவுக்கு ஓட்டுப்போடும்படி ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை.. மாறாக, அமமுக என்ற கட்சியை கலைத்துவிடும்படி தினகரனுக்கு அட்வைஸ் செய்தார் சசிகலா..

அமமுக
அமமுகவின் முக்கிய தூணாக இருந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோர் எல்லாம் திமுக பக்கம் சென்றுவிட, பக்கபலமாக இருந்த மூத்த தலைவரான வெற்றிவேலும் இறந்துவிட கட்சி பலவீனமாக ஆரம்பித்தது.. செல்வாக்கை இழந்த அமமுக மீது ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவுக்கு பிடித்தம் இல்லை என்றே தெரிகிறது.. அதனால்தான், அமமுக என்ற வார்த்தையே இதுவரை சசிகலா வாயில் இருந்து உச்சரிக்கப்படவில்லை.. இதுதான் தினகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்த தொடங்கியது.

நிர்வாகிகள்
அமமுக என்ற கட்சி பிரம்மாண்டமாக இருக்கும்போது, எதற்காக சசிகலா, அதிமுக பின்னாடியே செல்ல வேண்டும்? அக்கட்சியில் இணைய முயற்சிப்பதை விட்டுவிட்டு, பேசாமல் அமமுகவின் அவைத் தலைவராக இருந்து, வழிநடத்தினால் சிறப்பாக இருக்குமே என்று தினகரன் கணக்கு போட்டார்.. ஒருகட்டத்தில், சசிகலா பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது என்று தன்னுடைய நிர்வாகிகளுக்கு தினகரன் வாய்மொழி உத்தரவிட்டதாகவும் செய்திகள் கசிந்தன.. இப்படி இவர்கள் 2 பேருக்கு நடுவில் பனிப்போர் 3 மாத காலத்துக்கு மேலாகவே நடந்து கொண்டிருக்கிறது.

பேட்டி
இப்போது விஷயம் என்னவென்றால், அதிமுகவுக்கு சசிகலா ஆதரவு தரும்வகையில் ஒரு பேட்டி தந்துள்ளார்.. மறைந்த முதலமைச்சரும் திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவுநாளில், இன்று சென்னையில் தன்னுடைய வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்... இதற்கு பிறகு செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னபோது:

சுற்றுப்பயணம்
"பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்... அம்மாவின் ஆட்சியை நிச்சயம் தமிழகத்தில் கொண்டு வருவோம். யார் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது 8 வருட காலத்தில் மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்... நிச்சயம் அனைவரையும், அரவணைத்து செல்வோம், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எனது தலைமை செயல்படாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக பெருவாரியான வெற்றியைப் பெறும். தேர்தலுக்குப் பிறகு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்திப்பேன்" என்றார்.

மெமேஜ்கள்
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சசிகலாவின் இந்த பேச்சு 2 விதமான மெசேஜ்களை தந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.. ஒன்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெறும் என்று கூறி, அதிமுகவுக்கான தன்னுடைய ஆதரவை சசிகலா வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.. இன்னொன்று, இப்படி அதிமுகவுக்கு ஆதரவ தந்ததன் மூலம், தினகரனுக்கு தன்னுடைய ஆதரவு இல்லை என்பதையும் ஓபனாக சொல்லிவிட்டார்.. இதற்கு தினகரன் எப்படி எதிர்வினையாற்ற போகிறார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதிமுக என்ன ரியாக்ஷன் செய்ய போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக கிளம்பி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications