எத்தனை தடவை சொல்றது...? 100 % வெற்றி எங்களுக்கு தான்.. சொல்லும் அமைச்சரின் வாரிசு
சென்னை:தென் சென்னை தொகுதியை அதிமுக கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி என தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ளன. அதனால், வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், பிரச்சாரம் பொதுக்கூட்டம் என அரசியல் களமே பரபரப்பாகி இருக்கிறது.
லோக்சபா மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து அதிமுக வேட்பாளரகள் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, அவர்கள் தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு
தென்சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், அதிமுக எம்பியுமான ஜெயவர்தன் அடையாறில் இருக்கும் தேர்தல் ஆணைய மண்டல அலுவலகத்தில் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

மக்கள் நலத்திட்டங்கள்
மக்கள் பணியே மகேசன் பணி என்கின்ற அடிப்படையில் தொடர்ந்து மக்களை சந்தித்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் வழியாக பெற்று தந்திருக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் தலைவர் முதல் தொண்டன் வரை மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அதிமுக செய்து கொண்டிருக்கிறது.

திமுக, காங். என்ன செய்தது?
அதிமுகவை பொறுத்த வரை மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். 10 ஆண்டுகள் இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணி என்ன செய்தது? என்ன உரிமையை மீட்டெடுத்தார்கள்?

குடும்ப நலனே முக்கியம்
திமுகவுக்கு தங்களின் குடும்பநலம் ஒன்றே முக்கியம். ஆனால் அதிமுக ஒட்டுமொத்தமாக மக்கள் நலனை சார்ந்து இருக்கிறது.

வாக்குகள் சேகரிப்பு
பிரச்சாரம் தொடங்கி மக்களை சந்தித்து தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறோம். திடக்கழிவு மேலாண்மை திட்டம் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது இதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தென் சென்னை தொகுதியை அதிமுக கைப்பற்றுவது 100 சதவீதம் உறுதி என்று அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications