தமிழ்நாட்டில் பாஜக மட்டும் டெபாசிட் வாங்கட்டும்.. நான் தூக்கில் தொங்க ரெடி! அதிமுக தொண்டரின் ஆவேசம்
சென்னை: பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்று தேர்தலில் டெபாசிட் வாங்கினால் தூக்கில் தொங்குவேன் என அதிமுக தொண்டர் சவால் விடுத்து இருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தொடர்பாகவும் அதிமுக தொண்டர்களிடம் ஒன் இந்தியா தமிழ் கருத்து கேட்டது. அப்போது ஒரு தொண்டர் பேசுகையில், "தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நாங்கள் நடப்போம். அண்ணாமலை சொல்கிறார்.. படையப்பா சொல்கிறார் என்பதெல்லாம் தேவையில்லை. தலைமைக்கு கட்டுப்பட்டு சொல்வோம்." என்றார்.

மற்றொருவர், "எங்கள் அண்ணன் எடப்பாடியார் எடுக்கும் முடிவை கட்டுப்பட்டு செயல்படுவோம். கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும். மற்றவர்களை விமர்சிப்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து. தலைமை சொல்வதை கேட்டு நடப்போம்." என்று தெரிவித்தார்.
தலைமை என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை என ஆவேசமாக பேச்சைத் தொடங்கிய அதிமுக தொண்டர் ஒருவர், "தொண்டர்களை பொறுத்தவரை அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளே கிடையாது. அண்ணாலை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளாண். மூத்த அரசியல்வாதிகள் எல்லாம் எவ்வளவோ பெயர் உள்ளனர்.

பாஜகவிலும் இருக்கிறார்கள். காங்கிரஸிலும் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் விமர்சிக்காதபோது அண்ணாமலை எப்படி இருந்தார் என்று கர்நாடகாவுக்குபோய் கேட்டால்தான் தெரியும். அவர் அங்கு தில்லுமுல்லு பண்ணிவிட்டு இங்கு ஓடி வந்து பாஜகவில் தலைமையேற்று இப்படி பேசுகிறார். அவரது பேச்சு எல்லாம் எடுபடாது. கடந்து செல்லும் மேகங்களை போன்றது.
இவர் வேஸ்ட். இவர் பேசும் பேச்சும் வேஸ்ட். இவர் ஏனோதானோ என்று பேசிவிட்டு தமிழ்நாடு மக்களிடம் கைத்தட்டல் வாங்க வேண்டும், பாராட்டு வாங்க வேண்டும் என்று நினைக்கிறார். மற்றபடி தலைமை சொல்வதைதானே இவர் கேட்கவேண்டும். அப்படி கேட்காவிட்டால் இவரை தூக்கிவிடுவார்கள்.

அதிமுக எவ்வளவோ எதிர்ப்புகளை சந்தித்தது. திமுகவை விட ஒரு கட்சியா பாஜக. பாஜக இங்கு என்ன நிலைமையில் இருந்தது என்று தெரியும். பாஜகவால் தமிழ்நாட்டில் தனித்து நிற்க முடியுமா? தனித்து நின்று பாஜக டெபாசிட் வாங்கினால் நான் இந்த மரத்தில் தூக்கில் தொங்குவேன். ஒரு தனித்துவமில்லாத கட்சி என்று அவரே சொல்கிறார்." என்றார்.
"அவர் மேனேஜர் சொல்வதை நாங்கள் வழிநடத்த முடியாது. எங்கள் தலைமை என்ன சொல்கிறதோ, எங்கள் எடப்பாடியார் என்ன சொல்கிறாரோ அது வழியில் நாங்கள் செல்வோம். அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் என்று விமர்சனம் செய்ய விரும்பவில்லை. எங்கள் கொள்கைகளோடு எல்லோரும் நடப்பார்கள்." என்றார் மற்றொரு தொண்டர்.
அண்ணாமலை எங்களுக்கு வேண்டாம் என்பதே எங்கள் திட்டவட்டமான கருத்து என எடுத்தவுடனே பேச்சை தொடங்கிய மற்றொரு அதிமுக தொண்டரோ, "கேவலமான, அரசியல் தகுதியற்ற அண்ணாமலை எதுக்கு எங்களுக்கு. கூட்டணி தர்மத்தை மதிக்காதவர் அண்ணாமலை. எங்களுக்கு அண்ணாமலை ஒரு பொருட்டே இல்லை.

வாஜ்பாய் அரசை கொண்டு வந்ததே ஜெயலலிதா என்று ராஜ்நாத் சிங் பேசினார். ராஜ்நாத் சிங்கிற்கு தெரிந்த மரியாதை, அரண், அன்பு, பாசம் என்பது கூட இல்லாமல் வாழத் தகுதியற்ற நிலைமையில் அண்ணாமலை தள்ளப்பட்டு இருக்கிறார். அவர் கேவலமான ஜென்மம் என்பதே எங்கள் நிலைபாடு. அண்ணாமலைக்கான பதிலை சிவி சண்முகமே சொல்லிவிட்டார். எம்பியே சொல்லிவிட்டபோது நாங்கள் சொல்வதில் என்ன உள்ளது." என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications