• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பெட்ரூமில்" சுமித்ரா.. ஒரே சிரிப்பு.. செல்வம் காலை பிடிக்க.. அப்பா கையை பிடிக்க, வாயை பொத்திய அம்மா

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பெண் தடம்மாறினால், அந்த குடும்பமே சிதறி சின்னாபின்னமாகிவிடும் என்பதற்கு இன்னொரு உதாரணம்தான் சுமித்ரா.. இந்த இளம்பெண்ணால், 3 பேர் இன்று சிறைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம்.. இவர் ஒரு மீனவர்... மனைவி பெயர் சுமித்ரா. 26 வயதாகிறது.

இவர்களுக்கு கல்யாணமாகி 9 வருடங்கள் ஆகின்றன.. 2 மகன்கள் இருக்கிறார்கள்.. சுமித்ராவுடன் அவருடைய அப்பா செல்வக்குமார், அம்மா ரெஜினா என எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

நவ.26 சட்ட நாளில் பகவத் கீதை, உபநிடதங்கள் நடத்த உத்தரவிடுவதா? மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம் நவ.26 சட்ட நாளில் பகவத் கீதை, உபநிடதங்கள் நடத்த உத்தரவிடுவதா? மத்திய பாஜக அரசுக்கு வைகோ கண்டனம்

மீனவர்

மீனவர்

இந்நிலையில், கடந்த மாதம் 11-ந்தேதி, படுக்கை அறையில் சுமித்ரா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார்... திடீரென மயங்கி, இறந்து விட்டதாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு, சுமித்ராவின் பெற்றோரே தகவலும் தந்தனர்.. இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து, சுமித்ராவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், சுமித்ராவின் தலையில் உள்காயம் இருந்ததும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது.

பாய் ஃபிரண்ட்ஸ்

பாய் ஃபிரண்ட்ஸ்

இதையடுத்து, போலீசார், இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.. பின்னர், குடும்பத்தில் யாராவது ஒருவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில், விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால், அந்த குடும்பமே சேர்ந்து கொலை செய்ததை அறிந்து அதிர்ந்து போய் நின்றார்கள்.. கணவர் செல்வம், அப்பா செல்வக்குமார், அம்மா ரெஜினா 3 பேருமே சேர்ந்து, சுமித்ராவை கொன்றதாக ஒப்புக் கொண்டார்கள்.. காரணம், சுமித்ராவுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருந்துள்ளார்கள்.. கல்யாணம் செய்து வைத்தபோதும்கூட, ஆண் நண்பர்கள் சகவாசத்தை சுமித்ரா கைவிடவில்லை.

படுக்கையறை

படுக்கையறை

இவர்கள் ஏற்கனவே ஒரு வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள்.. அங்கேயும் இப்படித்தான் நிறைய ஆண்களுடன் பழகி வந்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்த குடும்பத்தினர், அங்கிருந்து வீட்டை காலி செய்து, வேறு இடத்துக்கு குடிவந்துள்ளனர்.. அப்போதும் சுமித்ரா அடங்கவில்லை.. இது தற்போது கொலை வரை சென்றுள்ளது.. சம்பவத்தன்று நடந்தது குறித்து, சுமித்ராவின் அம்மாவே, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராவின்டேனி நடத்தியிடம், வாக்குமூலம் தந்துள்ளார்.. அப்போது அவர் சொன்னதாவது:

ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்

ஏகப்பட்ட ஆண் நண்பர்கள்

"சுமித்ராவும், செல்வமும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்... இது ஒரு காதல் திருமணம்.. நாங்கள் ஏற்கனவே கூட்டு குடும்பமாக திருவொற்றியூரில் வசித்து வந்தோம்... அங்கு சுமித்ராவுக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்து வீட்டை காலி செய்து புதுவண்ணாரப்பேட்டை பகுதிக்கு வந்து விட்டோம்.. இங்கு வந்த பின்பும், பலருடன் சுமித்ராவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.. எப்ப பார்த்தாலும், செல்போனில் சிரித்து, சிரித்து பேசிக்கொண்டே இருப்பாள்.. இதனை பலமுறை அவளது கணவரும், அவளது அப்பாவும், நானும் கண்டித்தோம். ஆனால் சுமித்ரா கண்டுகொள்ளவில்லை. அவளது கள்ளத்தொடர்பும் நீடித்து வந்தது.

சாப்பாடு

சாப்பாடு

சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சுமித்ரா, அன்று மாலை 3 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தாள்... சாப்பிடுவதற்கு எதுவும் செய்யவில்லை, யாரும் சாப்பிடவும் இல்லை, சமையல் செய்யாமல் எங்கே போயிட்டு வருகிறாய்? என்று கேட்டோம், அதற்கு அவள், திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலுக்கு சென்று வந்ததாக பொய் சொன்னாள்... இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் என் கணவரும், சுமித்ராவின் கணவரும் இருந்தார்கள். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியதையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் எங்களை சமாதானப்படுத்திவிட்டு போனார்கள்.

படுக்கையில் சுமித்ரா

படுக்கையில் சுமித்ரா

ஆனாலும், சுமித்ரா மீது எங்களுக்கு கோபம் தீரவேயில்லை.. கொஞ்ச நேரத்துக்கு பிறகு, படுக்கை அறைக்கு சென்று சுமித்ரா தூங்கிவிட்டாள்.. அப்போது நாங்கள் அனைவரும் படுக்கையறைக்கு சென்றோம்.. என் கணவர் செல்வக்குமார் சுமித்ரா கையை பிடித்துக் கொண்டார்.. செல்வம் காலை பிடித்துக்கொண்டார்... நான், சுமித்ராவின் வாயை பொத்தி அவளது கழுத்தை நெரித்தேன்... கொஞ்ச நேரத்தில், சுமித்ரா துடிதுடித்து இறந்து போனாள்... அதற்கு பிறகு, அவள் தானாகவே மயங்கி விழுந்து விட்டதாக சொல்லி நாடகமாடினோம்.. ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உண்மை வந்துவிட்டது.. பலருடன் தகாத உறவில் இருந்ததை கைவிட்டு விடும்படி சொல்லியும் கேட்காததால்தான் இப்படி செய்தோம்" என்றார்.

English summary
adultery teen killed by parents, husband and arrested near Chennai, what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X