5 நிமிடங்களில் காலி! பொங்கல் ரயில் டிக்கெட் புக்கிங்.. நாளையும் முக்கியமான தேதி.. நோட் பண்ணுங்க
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ரயில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் 12 ஆம் தேதி செல்வதற்கான புக்கிங் தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், ஜனவரி 13ம் தேதி செல்ல திட்டமிடுபவர்கள் நாளை காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் பண்டிகைகளில் முதன்மையானது பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

டிக்கெட் முன்பதிவு: சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று தனது உற்றார் உறவினர்களுடன் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி செல்வார்கள். குடும்பத்துடன் செல்ல ரயில் பயணமே சிறந்தது என்பதால், ரயிலில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணம் செய்ய திட்டமிடுவார்கள். ஏனெனில் கடைசி நேரத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்ய நினைத்தால் படாத பாடு படவேண்டியிருக்கும்.
பேருந்துகள், ரயில் நிலையங்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டமாகவே இருக்கும். இதனை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தான் உள்ளது.
ஜனவரி 14 பொங்கல் பண்டிகை: இதன்படி, பார்த்தால் வரும் பொங்கலுக்கு ஊருக்கு செல்ல பிளான் செய்பவர்கள், அதாவது 12 ஆம் தேதி செல்ல வேண்டும் என்றால் அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு இதற்கான டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் டிக்கெட் கவுண்டர்களில் இன்று முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே கூறியிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு டிக்கெட் புக்கிங்க் தொடங்கிய நிலையில் வெறும் 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது. 15 ஆம் தேதி புதன்கிழமை அன்று மாட்டுப் பொங்கல், 16 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை 13ஆம் தேதி திங்கள்கிழமை வருகிறது. இதனால், நீண்ட நாள் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு வெள்ளிக்கிழமையே பயணம் செய்ய விரும்புவார்கள்.
இன்று காலை 8 மணிக்கு: அந்த வகையில், ஜனவரி 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் காத்திருந்தனர். ஆனால் டிக்கெட் புக்கிங் தொடங்கிய 5 நிமிடத்தில் எல்லா டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு, ஜனவரி 11 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை சொந்த ஊர் செல்ல திட்டமிடுபவர்கள் முன்பதிவு செய்யலாம். இன்று டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போனவர்கள் நாளை காலை 8 மணிக்கு இந்த வாய்ப்பை பயன்படுததி கொள்ளலாம். ஜனவரி 12 ஆம் தேதி செல்ல நினைப்பவர்கள் நாளை மறுநாள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15 ஆம் தேதி முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
ஐஆர்சிடிசி & டிக்கெட் கவுண்டர்கள்: ரயில்வே டிக்கெட் புக்கிங் இணையதளமான ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வேயில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்யலாம். பொதுவாக பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.. அதேபோல, டிக்கெட் முன்பதிவும் தொடங்கிய சில நிமிடங்களில் காலியாகிவிடும். தீபாவளி பண்டிகை, ஆயுத பூஜை பண்டிகை போன்ற நாட்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று வெயிட்டிங் லிஸ்ட் ஆக போனது.
குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கண் இமைக்கும் நேரத்தில் டிக்கெட்டுகள் காலியானது. காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில் ஐஆர்சிடிசி மற்றும் பிற இணையதளங்கள் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்து முடிவடைந்து வெயிட்டிங் லிஸ்ட்டை காட்டியது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications