சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு.. தமிழகம், புதுவையில் வக்கீல்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு.. தமிழகம், புதுவையில் வக்கீல்கள் போராட்டம்

    சென்னை: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தமிழகம் முழுதும் இன்று 1 லட்சம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளோம்.

    advocates stage protest in support of madras hc cj

    தலைமை நீதிபதி மாற்றத்தை திரும்ப பெற கோரி, அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் ஒருங்கிணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடமும், குடியரசுத் தலைவரிடமும் மனு அளிக்க உள்ளோம்.

    கள்ளக்காதல்.. மனைவி இடையூறு.. தலையணையால் அழுத்திக் கொன்ற கணவர்.. ஆயுள் தண்டனைகள்ளக்காதல்.. மனைவி இடையூறு.. தலையணையால் அழுத்திக் கொன்ற கணவர்.. ஆயுள் தண்டனை

    நீதித்துறையின் மாண்பை காப்பாற்றும் வகையிலும், தலைமை நீதிபதிக்கு சாதகமான முடிவு வரும் வகையிலும், எங்கள் சங்கங்கள் கூடி ஒரு உரிய முடிவு எடுக்க உள்ளோம் என்றார்.

    advocates stage protest in support of madras hc cj

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனது இடமாற்றத்தை விரும்பாத தலைமை நீதிபதி தனது ராஜினாமாவை அனுப்பி வைத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

    English summary
    TN and Puducherry advocates staged a protest in support of Madras HC chief justice Tahil Ramani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X