வடசென்னைக்கு இவ்வளவு கோடியா! அப்படியே மாறப்போகும் கூவம், அடையாறு.. பிடிஆர் சொன்ன மாஸ்டர்பிளான்

இந்த பட்ஜெட்டில் வடசென்னைக்கு என்று பல சிறப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.1,000 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும், தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரங்கள் குளங்கள், நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்படும். அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

வருவாய் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் 62 ஆயிரம் கோடியாக இருந்தது. இதை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து உள்ளோம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாற்றத்தை செய்து இருக்கிறோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

பட்ஜெட்

பட்ஜெட்

அவர் தனது பட்ஜெட்டில், ரூ.1,000 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். அங்கே மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் ரூ.800 கோடியில் 10,000 குளங்கள் புதுப்பிக்கப்படும். ரூ.621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே 4 வழி மேம்பாலம் கட்டப்படும். ரூ621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.

வடசென்னை

வடசென்னை

வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய, புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவு அமைக்கப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ₹20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். அடையாறு ஆற்றில் 44 கி.மீ தூரத்திற்கு தூய்மைப்படுத்தும் திட்டம், கரைகளில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்

கூவம்

கூவம்

கூவம் ஆற்றிலும் இதே மாற்றங்கள் செய்யப்படும். சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். கூவம், அடையாற்றை சுத்தம் செய்ய பணிகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரங்கள் குளங்கள், நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்படும். அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

வெள்ளம்

வெள்ளம்

ரூ. 320 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் செயல்படுத்தப்படும். எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும். ரூ172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது; இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+