ருசிக்கு மயங்கியதால் பிபி எகிறியது.. சட்டென காப்பாற்றிய நண்பன்.. ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரசிய தகவல்

நான் கூறிய இந்த எல்லாவற்றையும் விட பவரான ஆள் யார் தெரியுமா.. நம்ம உப்புதான். உப்பு கொஞ்சம் ஜாஸ்தி ஆச்சு என்றாலும் , உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் பாதிக்கப்படும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அனுபவங்களில் இருந்து தான் கற்றுக்கொண்டதை தன் ரசிகர்களுக்கும், பிறருக்கும் அறிவுரையாக கூறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

அது உடல்நலம் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி.. மனநலம் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி.. தனக்கு நேர்ந்த அனுபவத்தை எந்தவித ஒளிவுமறைவும் இன்றி கூறி வருபவர் ரஜினிகாந்த். உதாரணமாக, புகைப்பிடித்ததால் தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்ச்சியில் அவர் பேசியிருந்தார்.

மேலும், தனது ரசிகர்கள் யாரும் சிகரெட் பிடிக்கக் கூடாது என அன்புக் கட்டளையும் இட்டிருந்தார் ரஜினிகாந்த். இதையடுத்து, அவரது ரசிகர்கள் பலர் புகைப்பிடிப்பதை நிறுத்தினர்.

நிறைய சரக்கு அடித்தால்..

நிறைய சரக்கு அடித்தால்..

இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த பாதிப்பு குறித்து தற்போது மனம் திறந்திருக்கிறார் ரஜினிகாந்த். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: நிறைய சரக்கு போட்டால்.. ஓ.. உங்களுக்கு புரியும்படியே சொல்கிறேன். நிறைய மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கும். நிறைய 'தம்' (சிகரெட்) அடித்தால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். துரித உணவுகளை (ஃபாஸ்ட் புட்) அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும், எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிட்டாலோ இதயம் பாதிக்கும்.

உப்புதான் பவர்ஃபுல்

உப்புதான் பவர்ஃபுல்

ஆனால், நான் கூறிய இந்த எல்லாவற்றையும் விட பவரான ஆள் யார் தெரியுமா.. நம்ம உப்புதான். உப்பு கொஞ்சம் ஜாஸ்தி ஆச்சு என்றாலும் , உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் பாதிக்கப்படும். உப்புக்கு அவ்வளவு 'பவர்' இருக்கிறது. சரி.. உப்பை கம்மி பண்ணிட்டால் ஓகேவா என்றால் அதுவும் கிடையாது. உப்பை ரொம்ப கம்மி பண்ணினாலும் தப்பு ஆயிடும். சரியான அளவு உப்பை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு பற்றி பேசும்போதுதான் ஒரு நிகழ்ச்சி நியாபத்துக்கு வருது. அதை சொல்கிறேன்.

செம்ம டேஸ்ட்..

செம்ம டேஸ்ட்..

ஒரு திருமணத்துக்கு எனது மனைவி லதா சென்றிருக்கிறார். திருமண விருந்தில் உணவு சூப்பராக இருந்துள்ளது. உடனே யார் சமையல்காரர் என லதா விசாரித்திருக்கிறார். அதற்கு அனைவரும் நாராயணன் எனக் கூறியிருக்கின்றனர். அந்த சமயத்தில் எங்கள் வீட்டு சமையல்காரருக்கு உடம்பு சரியில்லை. அதனால், லதாவும் நாராயணனை பார்த்து, "எங்கள் வீட்டுக்கு சமையல்காரராக வரீங்களா?" எனக் கேட்டுள்ளார். கரும்பு சாப்பிட கூலியா என்பதை போல அவரும் வந்துவிட்டார். சும்மா சொல்லக்கூடாது.. சூப்பராக சமைத்தார். செம டேஸ்ட். அந்த மாதிரியான சுவையை நான் அனுபவித்ததே இல்லை.

எகிறிய பி.பி.

எகிறிய பி.பி.

நாங்களும் நன்றாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம். அதேவேளையில், எனக்கும் எனது மனைவிக்கும் ரத்த அழுத்தம் எகிறிக்கொண்டே சென்றது. டாக்டர்களிடம் சென்றோம். சிகிச்சையும் எடுத்தோம். ஆனாலும் ரத்த அழுத்தம் குறைந்தபாடில்லை. ஏறிக்கொண்டேதான் இருந்தது. அப்போதுதான் ஒருமுறை எனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டார். "சாப்பாடு எப்படி இருக்கிறது?" என்று சும்மா கேட்டேன். அதற்கு அவரோ, "என்னடா.. சாப்பாட்டில் இவ்வளவு உப்பு இருக்கு.. இவ்ளோ எண்ணெய் இருக்கு.. எப்படிடா இதை சாப்பிடுரீங்க.. என எங்களை பொறிந்து தள்ளிவிட்டார்.

 நண்பனால் தப்பித்தோம்..

நண்பனால் தப்பித்தோம்..

அய்யய்யோ, என்னடா இவர் இப்படி சொல்றாரே.. வருஷம் முழுவதும் நாம இந்த உணவைதானே சாப்பிடுகிறோம் என எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்டு அனைத்தையும் மாற்றினேன். அதன் பின்னரே பிபி எங்களுக்கு குறைந்தது. அதுமாதிரி நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். உப்பு அதிகம் சாப்பிட சாப்பிட, அதுவே பழிகிவிடும். புதிதாக யாராவது சொன்னால்தான் தெரியவரும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+