11 மணிநேர சோதனை.. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் ஐடி ரெய்டு நிறைவு.. சிக்கியது என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் தான் சென்னை மந்தை வெளியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இந்த வேளையில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர் சார்பில் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில் பணம் திரும்ப வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை முடித்து கொள்ளப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாஜக சார்பில் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு முறைகேடு புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னை, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு, அலுவலகம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு, அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்கள் என 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் திமுகவினர் வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு தாக்க முயன்றனர். ஐடி கார்டு கேட்டு அட்டூழியம் செய்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 9 இடங்களில் ரெய்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு 9 இடங்களிலும் சோதனைகள் நடந்தன. பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனை என்பது செந்தில் பாலாஜியின் வீட்டில் நடக்கவில்லை. மாறாக அவரது தம்பி, நண்பர்கள், உறவினர்கள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் மட்டுமே நடந்தது. இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜியே விளக்கம் அளித்து இருந்தார்.
இதற்கிடையே தான் சென்னை மந்தவெளி பிஷப் கார்டனில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிலும் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் அங்குலம் அங்குலமாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தான் மந்தவெளி அசோக் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை இன்று இரவு முடிவடைந்துள்ளது. இருப்பினும் பிற இடங்களில் சோதனை தொடர்கிறது.
சுமார் 11 மணிநேரம் வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சோதனையின் முடிவில் அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி தற்போது வரை வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்காத விலையில் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் நடக்கும் சோதனைகள் முடிவடைந்த பிறகு ரெய்டில் சிக்கியது என்னென்ன? என்பது பற்றிய தகவல்களை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications