44 வருடங்களில்.. இதுதான் பெஸ்ட்.. ஆகஸ்ட் மாதம் அசாத்திய ரெக்கார்ட் படைத்த மழை.. எவ்வளவு பெய்தது?
சென்னை: கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஏப்ரல் மாதம் மிக அதிக அளவில் மழை பெய்து புதிய ரெக்கார்ட் படைத்துள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுக்க இந்த முறை தென்மேற்கு பருவமழை மிகவும் நன்றாக பெய்தது. அதிலும் தமிழகம், டெல்லி, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இரண்டு மாதமாக நன்றாக மழை பெய்தது.
மும்பை, டெல்லியில் ரெக்கார்ட் பிரேக் செய்யும் அளவிற்கு ஆகஸ்ட், ஜூலை மாதம் முழுக்க மழை பெய்தது. ஒடிசாவில் புயலுடன் ஆகஸ்ட் மாதம் முழுக்க மழை பெய்தது.

என்ன சாதனை
இந்த நிலையில் கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஏப்ரல் மாதம் மிக அதிக அளவில் மழை பெய்து புதிய ரெக்கார்ட் படைத்துள்ளது என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இதற்கு முன் 1976ல்தான் ஆகஸ்ட் மாதம் அதிக மழை பெய்தது. அதன்பின் 44 வருடங்கள் கழித்து அதேபோல் ஒரு ரெக்கார்ட் பிரேக் தற்போது நிகழ்ந்துள்ளது.

எவ்வளவு மழை
அதன்படி இந்த ஆகஸ்ட் மாதம் நினைத்ததை விட 25% அதிகமாக மழை பெய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் சராசரியை விட 10% குறைவாக மழை பெய்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் அதற்கு எதிர்மாறாக அதிக மழையை பெய்துள்ளது. ஆகஸ்ட் 1-28ம் தேதி வரை மொத்தம் 296.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஏன் அதிகம்
ஆகஸ்ட் மாதம் சராசரியாக 237.2 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டும். மொத்தம் 59 மில்லிமீட்டர் மழை அளவு அதிகமாக பெய்துள்ளது. இது சராசரியை விட 25% அதிகம் ஆகும். மத்திய இந்தியாவில்தான் இப்படி அதிகமாக மழை பெய்துள்ளது. தென்னிந்தியாவிலும் நன்றாக மழை பெய்துள்ளது. கடைசியாக கடந்த 1976ல் ஆகஸ்ட் மாதம் சராசரியை விட 28.4% அதிகமாக மழை பெய்தது.

கடந்த 120 வருடம்
அதன்பின் இப்போது 25% அதிகம் பதிவாகி உள்ளது. கடந்த 120 வருடங்களில் பெய்த மழை அளவை பார்த்தால், 1926 ஆகஸ்ட் மாதம் 33% அதிகம் மழை பெய்தது. இதுதான் 120 வருடங்களில் ஆகஸ்ட் மாதம் பெய்த அதிக மழை ஆகும். ஆனால் இந்த வருடம் போக போக இந்த மழை அளவு குறையும். செப்டம்பர் மாதம் மழை அளவு பெரிய அளவில் குறையும், என்கிறார்கள்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications