Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவை கலங்கடிக்கும் திமுக.. மைத்ரேயன், அன்வர் ராஜா டீசர்தான்! இன்னொரு திமிங்கலத்தை தூக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் அடிமட்ட உறுப்பினராக இருந்து வளர்ந்து மேலே வந்த அன்வர் ராஜா, திமுகவை அரசியல் காலத்தின் தொடக்கம் முதல் எதிர்த்த மைத்ரேயன் இருவரும் அதிமுகவை விட்டு வெளியேறி உள்ளனர்.

நேற்று காலை திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன். அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மைத்ரேயனை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து , திமுக ஆட்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. 2026இல் தமிழகத்தில் திமுக ஆட்சி உறுதி. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது.. 2வது இடத்திற்குதான் போட்டி நடக்கும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி அளித்துள்ளார்.

Anwar Raja dmk

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை 99 எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது என்று திமுகவில் இணைந்த பின் முன்னாள் எம்.பி. உறுப்பினர் மைத்ரேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அன்வர் ராஜா - மைத்ரேயன் மாற்றம்

இதுபோக சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறி அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் இருக்கும் இன்னொரு முக்கிய புள்ளி ஒருவர் விரைவில் திமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் சமீபத்தில் இணைந்தார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அன்வர் ராஜா 2001ல் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தமிழக சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இவர் தமிழக அரசில் இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக 16ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2014 தேர்தலில் இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக பணியாற்றியவர் அன்வர் ராஜா.

அடுத்த விக்கெட் யார்?

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவில் இருக்கும் இன்னொரு முக்கிய புள்ளி ஒருவர் விரைவில் திமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகள் பலரும் கட்சி மாறுவது வழக்கம். பலரும் வெற்றிபெறக்கூடிய கட்சிக்கு, பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவர் விரைவில் திமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தை சேர்ந்த புள்ளி அவர் என்று சிலர் கூறும் நிலையில், இன்னொரு தரப்போ அவர் சென்னையில் இருக்கும் புள்ளி என்கிறார்கள். அவர் மீது சில வழக்குகளும் உள்ளன. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருடன் சேர்ந்து இவர் திமுகவில் இணைய உள்ளாராம். இதற்கான இணைப்பு விழா விரைவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்கிறார்கள். இவர் மாறும் பட்சத்தில் அதிமுகவிற்கு இருக்க கூடிய அஸ்திவாரம் பெரிய அளவில் காலி ஆகும் என்கிறார்கள். அந்த வகையில், அதிமுகவில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் திமுகவில் இணைய ஆயத்தமாகி வருகிறார். அவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரா அல்லது சென்னையைச் சேர்ந்தவரா என்பது குறித்து பல தரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

அதிமுக பிரமுகரின் அரசியல் நகர்வு

அவர் திமுகவில் இணைந்தால், அதிமுகவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படலாம். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மாறும் நிகழ்வுகள் தேர்தலுக்கு முன்பு ஒரு பொதுவான விஷயமாகும். இதன் காரணமாக கட்சிகளின் பலம் மாறுபடும்.

அதிமுகவைச் சேர்ந்த அந்த முக்கிய பிரமுகர், திமுகவில் இணைவதற்கான காரணம் குறித்து பல யூகங்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் கொள்கைகள் மீதான அதிருப்தி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எதிர்ப்பு, பதவி கிடைக்காத விரக்தி போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சிலர், அவர் மீதுள்ள வழக்குகள் காரணமாக கட்சி மாறுகிறார் என்றும் கூறுகின்றனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+