அமித் ஷா சொன்ன ஒரு வார்த்தை.. ஒரே வாரம்தான்.. அடுத்தடுத்து அண்ணாமலை அதிரடி.. ஜெர்க்காகும் சீனியர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துவிட்டு சென்றதில் இருந்தே மாநில பாஜகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தேசிய பாஜக தலைமை.. மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முழு ப்ரீ ஹேண்ட் கொடுத்துவிட்டதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்தார். புதுச்சேரிக்கு செல்வதற்காக சென்னை வந்தவர், சென்னையில் ஓர் இரவு மட்டும் தங்கி இருந்தார்.

சென்னையில் ஹால்ட் செய்வதற்காக வந்திருந்தாலும் கூட, அன்று இரவே சென்னையில் அமித் ஷா முக்கியமான சந்திப்புகள் மற்றும் கூட்டங்களை நடத்தினார். இரவோடு இரவாக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தார்.

டாப் தலைகள்

டாப் தலைகள்

இந்த சந்திப்பில் பல முக்கியமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பிற்கு பின்பே தற்போது தமிழ்நாடு பாஜகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. பொதுவாக பாஜகவில் மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டதும்.. மாவட்ட அளவில் நிர்வாகிகள் மாற்றம் நடக்கும். அதேபோல் பொறுப்பாளர்கள் மாற்றம், பொதுச்செயலாளர்கள் மாற்றம் நடக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின் அவர் பெரிதாக கட்சியில் மாற்றங்களை செய்யவில்லை.

நிர்வாகிகள் மாற்றம்

நிர்வாகிகள் மாற்றம்

நிர்வாகிகள் மாற்றம் எதையும் செய்யாமல் அண்ணாமலை அமைதி காத்து வந்தார். இந்த நிலையில்தான்.. அண்ணாமலை நிர்வாகிகளை மாற்ற தயாராகவே இருக்கிறார். இதற்காக மாவட்ட அளவில் கட்சிக்கு ஏற்ற, தனக்கு ஆதரவாய் இருக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து பட்டியலையும் அனுப்பிவிட்டார். ஆனால் அண்ணாமலை கொடுத்த பட்டியலுக்கு சிலர் சீனியர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. டெல்லியில் இவர்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.

டெல்லி முட்டுக்கட்டை

டெல்லி முட்டுக்கட்டை

டெல்லியில் இவர்கள் போட்ட முட்டுக்கட்டை காரணமாகவே நிர்வாகிகள் நியமனம் நடக்கவில்லை என்று செய்திகள் வந்தன. ஆனால் இதை சில சீனியர் பாஜக தலைவர்கள் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வந்த அமித் ஷா இதை பற்றி கேட்டதாக கூறப்படுகிறது. ஏன் நிர்வாகிகள் மாற்றம் நடக்கவில்லை.. லிஸ்ட் ரெடியென்றால் உடனே நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டியது தானே என்று கேட்டு இருக்கிறாராம்.

வேலை நடக்கணும்

வேலை நடக்கணும்

லோக்சபா தேர்தலுக்கு இரண்டு வருடம்தான் இருக்கிறது. ரெடியாகுங்கள். இப்போதே நிர்வாகிகளை நியமனம் செய்தால்தான் எம்பி பதவிகளை அள்ள முடியும். அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு பணிகளை தொடங்குங்கள். கூட்டணிகளை நம்பாமல், கட்சி தனியார் நிற்கும் அளவிற்கு முன்னேற வேண்டும். அதற்கு ஏற்றபடி நிர்வாகிகளை நியமனம் செய்யுங்கள் என்று அமித் ஷா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு அண்ணாமலைக்கு முழுமையாக ப்ரீ ஹேண்டை டெல்லி பாஜக தலைமை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

நியமனம்

நியமனம்

டெல்லி பாஜக கிரீன் சிக்னல் காட்டிய நிலையில்தான்.. அண்ணாமலை அடுத்தடுத்து அதிரடி நியமனங்களை செய்து வருகிறார். அமித் ஷா வந்துவிட்டு போன சில நாட்களிலேயே பாஜகவில் புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதேபோல் 59 மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அண்ணாமலை இலங்கையில் இருக்கும் போதே லிஸ்டை அனுப்பி, அதற்கு ஒப்புதலும் கொடுத்து நியமனம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில், அடுத்த சில நாட்களிலேயே இரண்டாம் கட்டமாக மேலும் நிர்வாகிகள் மாற்றமும் நேற்று நடந்தது. நேற்றுதான் பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பாஜகவில் கட்சி ரீதியாக நிர்வாகிகள் பட்டியல் ஏற்கனவே மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே நிர்வாகிகளை மாற்றி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். எனவே பாஜக கட்சி லோக்சபா தேர்தலுக்கு இனி தீவிரமாக தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகள் பலருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இவரின் வேகத்தை பார்த்து சில சீனியர்கள் கொஞ்சம் ஜெர்க்காகி உள்ளனராம். இதனால் கட்சியும் அவரின் முழு கண்ட்ரோலில் வரப்போவதாக அவரின் ஆதரவாளர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+