Star constituencies: தமிழகத்தில் நட்சத்திர தொகுதிகளில் நாதக வேட்பாளர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள ஸ்டார் தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற போகிறது. இதற்கான அறிவிக்கைகள் இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

tamil nadu assembly election 2026 ntk seeman 2026

தேர்தல் அறிவிப்பு எப்போது என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், தொகுகி பங்கீட்டு பேச்சுவார்த்தை, விருப்பமனு உள்ளிட்டவைகளை செய்து வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய 4 முனை போட்டி இருக்கும். இந்த நிலையில் வழக்கம் போல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, நேற்று திருச்சி மாநாட்டில் வைத்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.

அதாவது 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என சரிசமமாக ஆண், பெண் பேதமின்றி வாய்ப்புகளை கொடுத்துள்ளார். இதில் 18-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பட்ட மேல் படிப்பை முடித்தவர்கள் என இருக்கிறார்கள்.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். அது போல் நாகப்பட்டினத்தில் கட்சியின் பேச்சாளர் பர்ஹானா பாத்திமா போட்டியிடுகிறார். வேதாரண்யத்தில் இடும்பாவனம் கார்த்திக்கும் ஒரத்தநாடு தொகுதியில் நடிகர் திருமுருகனும், ஆயிரம் விளக்கு தொகுதியில் இயக்குநர் களஞ்சியமும், ஆர்.கே. நகர் தொகுதியில் வெண்ணிலாவும் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஸ்டார் தொகுதிகளில் நாதக வேட்பாளர்கள் யார் என்பதை பார்க்கலாம். ஸ்டாலினின் தொகுதி கொளத்தூரில் சவுந்திரபாண்டியன், உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் ஆயிஷா பேகம், அது போல் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் பிரியதர்சினி போட்டியிடுகிறார்.

செங்கோட்டையன் போட்டியிட்ட கோபி தொகுதியில் கீதாலட்சுமியும், நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை தொகுதியில் சத்யாவும், கே.என்.வேரு போட்டியிட்ட திருச்சி மேற்கு தொகுதியில் புவனேஸ்வரி, கமல், வானதி போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் பேரறிவாளன் (இவர் வேறு நபர்) போட்டியிடுகிறார்கள்.

ஓபிஎஸ் போட்டியிட்ட போடி தொகுதியில் கலையரசுவும், அன்பில் மகேஷின் திருவெறும்பூர் தொகுதியில் ஜல்லிக்கட்டு ரமேஷும், டிஆர்பி ராஜாவின் மன்னார்குடி தொகுதியில் இலரா பாரதிச் செல்வனும், தங்கம் தென்னரசு போட்டியிட்ட திருச்சுழியில் கார்த்திக் ராஜாவும் செந்தில் பாலாஜியின் அரவக்குறிச்சி தொகுதியில் நரேன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அது போல் இந்த ஸ்டார் தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அது போல் தவெக சார்பில் யார் போட்டியிட போகிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+