அமலாக்கத்துறை ’தூக்கிய' செந்தில் பாலாஜி-மீண்டு வந்து கர்நாடகா டிகே சிவகுமார் போல பாஜகவை பந்தாடுவாரா?
சென்னை: மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் அடுத்த டிகே சிவகுமாரா? என்பது.

கர்நாடகா மாநிலத்தில் இன்றைக்கு காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது எனில் அதில் துணை முதல்வர் டிகே சிவகுமாரின் பங்களிப்பு பிரதானமானது என்பது மிகை அல்ல. ஆனால் இதே டிகே சிவகுமார்தான் பாஜகவுக்கு நெடுங்காலமாக சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறார். டிகே சிவகுமாரை கண்ட்ரோல் செய்வதற்காகவே அமலாக்கத்துறை ரெய்டுகள், கைதுகள், குடும்பத்தினருக்கு நெருக்கடி என எல்லாம் அரங்கேற்றமானது. ஓட ஓட விரட்டப்பட்டார் டிகே சிவகுமார். ஆனால் அவருக்கு அது ஆகப் பெரும் அனுதாபத்தை கொடுத்தது. மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. அண்டை மாநிலத்து- மகாராஷ்டிரா மாநிலத்து நாராயண் ரானே போலவோ அஸ்ஸாம் மாநிலத்து ஹிமந்த பிஸ்வாஸ் போலவே பாஜகவுக்கு ஓடிப் போயிருந்தால் டிகே சிவகுமார் மீதான அத்தனை வழக்குகளும் இன்று காணாமலே போயிருக்கும். ஆனாலும் பாஜகவை முழு வீச்சோடு நின்று எதிர்த்தார். பாஜகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் வியூகம் வகுத்து செயல்பட்டார். இதன் விளைவாக தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்கிற ஒற்றை மாநிலம் கர்நாடகா எனும் பெருமையை காலி செய்து கரி பூசி அனுப்பிவிட்டார் டிகேஎஸ். இப்போது கர்நாடகா மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார் டிகே சிவகுமார்.
இன்று தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை கைது செய்திருக்கக் கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜியும் கோவை மண்டலம் எனப்படும் மேற்கு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருப்பவர். இந்த மேற்கு மண்டலத்தைத்தான் பாஜக மலைபோல நம்பி இருக்கிறது. இந்த மேற்கு மண்டலத்தைதான் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதவி ஏற்ற போது கொங்கு நாடு அதிகாரப்பூர்வமற்ற தனி மாநிலமாக மத்திய அரசு எழுதியிருந்தது. இந்த கொங்கு மண்டலம், திமுகவுக்கு சவாலாக இருந்தது. இந்த சவால்களை காலி செய்து பாஜகவுக்கு மிரட்சியை தந்து கொண்டிருப்பவர் செந்தில் பாலாஜி. ஆகையால் அவருக்கு நெருக்கடி தந்து கைது செய்துவிட்டது; ஆனால் டிகே சிவகுமார் போல மீண்டும் வந்து பாஜகவை இன்னும் வெலவெலக்க வைப்பார் அண்ணன் செந்தில் பாலாஜி என நம்பிக்கையுடன் எழுதுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications