2.30 மணிநேரம் விலாவாரி வாக்குமூலம் தந்த விஜயலட்சுமி! திருவள்ளூர் கோர்ட் உத்தரவிட்டால் சீமான் கைது?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை திருமணம் செய்து ஏமாற்றி மோசடி செய்தது குறித்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுமார் 2.30 மணிநேரம் வாக்குமூலம் தந்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டால் சீமான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
2008-ம் ஆண்டு மதுரையில் தம்மை சீமான் திருமணம் செய்து கொண்டார்; தம்மிடம் இருந்து ரூ65 லட்சம் ரொக்கம், ரூ35 லட்சம் மதிப்பிலான நகைகளையும் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார். தம்மை கைவிட்டு விட்டு இன்னொர் திருமணம் செய்து கொண்டார் என்பதுதான் நடிகை விஜயலட்சுமியின் நீண்டகால புகார்.

2011-ம் ஆண்டு இதே புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பினார் நடிகை விஜயலட்சுமி. ஆனால் அப்போது அதிமுக ஆட்சியில் நடிகை விஜயலட்சுமி விவகாரம் அமுங்கிப் போனது. தற்போது மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் மோசடி புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இப்புகாரின் அடிப்படையில் சென்னை ராமாபுரம் காவல்நிலையத்தில் காவல் துணை ஆய்வாளர் உமையாள் சுமார் 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் விலாவாரியாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை முடிவடைந்த பின்னரும் சீமான் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல் நிலையத்தை விட்டு வெளியேறுவேன் என விஜயலட்சும் அடம் பிடித்தார் எனவும் கூறப்பட்டது.
இதனையடுத்து திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுமார் 2.30 மணி நேரம் நடிகை விஜயலட்சுமி, போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தை மீண்டும் வழங்கினார். இதை மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனடியாக கைது செய்யப்படுவார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
ஆனால் தம் மீதான புகார்கள் அனைத்தும் பொய்; தம்மை தேர்தல் பணிகளில் இருந்து திசை திருப்புவதற்கு இந்த புகார்கள் தரப்படுகின்றன. நான் எங்கும் தப்பிச் செல்ல மாட்டேன். முடிந்தால் என் மீது கை வைத்து பார்க்கலாம் என்றெல்லாம் சீமான் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications