Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Trisha: நயினார் நாகேந்திரன் மட்டுமில்லை! திரிஷாகிட்ட வாயை கொடுத்து சிக்கியவர்கள் இத்தனை பேரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனத்தை தெரிவித்திருந்த நடிகை த்ரிஷா, இதுவரை என்னென்ன விஷயங்களுக்காக தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

சேலத்தில் தவெக தலைவர் விஜய், ஏற்கெனவே இருக்கும் அரசியல் கட்சிகளால் தனிக் கட்சி தொடங்கி, கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு 1 சதவீத வாக்குகளையாவது பெற முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

trisha nainar nagendran vijay

இதுகுறித்து நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் "விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதுவும் திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என விஜய் மீது தனிநபர் தாக்குதலை நடத்தினார்.

விஜய் குறித்து கடும் விமர்சனம்

விஜய் குறித்து அரசியல் ரீதியாகவே விமர்சிக்க எத்தனையோ கருத்துகள் இருக்கும் போது தனிப்பட்ட விஷயங்களை நயினார் நாகேந்திரன் பேசுவது சரியா, அதிலும் ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி பேசுவது முறையா? ஒரு ஆணை அவமானப்படுத்த ஒரு பெண்ணை ஆயுதமாக கையில் எடுப்பதா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் திரிஷாவும் நேற்றைய தினம் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தார். "ஒரு அரசியல் கட்சியில் தலைவராக இருக்கும் நபரிடம் இருந்து இது போன்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை. எந்த அரசியல் கட்சியிலும் நான் இல்லை. எனவே நான் சம்பந்தப்படாத எந்த விஷயங்களிலும் என்னை தொடர்புபடுத்த வேண்டாம்" என கேட்டுக் கொண்டிருந்தார்.

நயினார் பேச்சுக்கு நிறைய கண்டனங்களை தெரிவித்தும் வருத்தம் தெரிவிக்காத அவர், திரிஷா கண்டித்ததை அடுத்து வாய்த் தவறி சொல்லிவிட்டேன் என்று கூறி தனது வருத்தத்தை தெரிவித்தார்.

கண்டன குரல்கள்

அதாவது திரிஷா இதுவரை எத்தனை விஷயங்களுக்காக கண்டன குரல்களை எழுப்பியிருக்கிறார் என்பதை பார்க்கலாம். விஜய் கட்சி ஆரம்பித்ததும் சமூகவலைதளங்களில் எத்தனையோ பேர் விஜய்யையும் திரிஷாவையும் இணைத்து வைத்து பேசியிருந்தனர்.

சிறிய சிறிய யூடியூப் சேனல்களும் திரிஷா விஜய் குறித்து பேசியிருந்தன. அதிலும் விஜய் முதல்வராகிவிட்டால், திரிஷாதான் துணை முதல்வர் என்றெல்லாம் முகம் தெரியாத சிலர் சிறிதும் பெண் என்று பார்க்காமல் உண்மையை கூட அறிந்துக் கொள்ளாமல் வாய் கூசாமல் விமர்சித்து வந்தனர்.

உண்மைக்கு புறம்பான கருத்துகள்

திரிஷாவுக்காகதான் விஜய் தனது மனைவியை பிரிந்தார் என்றெல்லாம் சிறிதும் உண்மையே இல்லாத கருத்துகளை தான்தோன்றித்தனமாக கூறி திரைக்கதை எழுதி வந்தனர். பொதுவாக ஒருவரது தனிப்பட்ட விஷயங்கள், அது உண்மையாகவே இருந்தாலும் அதை கிளறுவது நாகரீகம் கிடையாது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, இப்படி தனிப்பட்ட விஷயங்களை பேசினால் மல்லாக்க படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து எச்சில் துப்புவது போன்றுதான்!

இது போன்ற நெட்டிசன்களின் கருத்துகள் திரிஷாவை சென்றடைந்த போதிலும் அவர் "இவர்களெல்லாம் இப்படித்தான்" என கடந்து போனார். ஆனால் அவர் முதலில் எப்போது கண்டனத்தை தெரிவித்தார் தெரியுமா?

கூவத்தூர் திரிஷா

2024 ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜு என்பவர் கூவத்தூரில் கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது திரிஷாவுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து அழைத்து வரப்பட்டதாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ஒரு கட்சியின் நிர்வாகியிடம் இருந்து இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற கருத்துகள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த திரிஷா, legal notice அனுப்பியதும், ராஜு மன்னிப்பு கேட்டார்.

லியோ திரைப்படம்

கடந்த 2023 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்த போது, "லியோ திரைப்படத்தில் திரிஷாவுடன் ரேப் சீன் இல்லை" என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அப்போது மன்சூரின் கருத்தை வன்மையாக கண்டித்த திரிஷா, இனி மேல் அவர் நடிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என கண்டனம் தெரிவித்திருந்தார். மன்சூரின் பேச்சுக்கு அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டித்திருந்தார். பின்னர் மன்சூர் விளக்கமளித்திருந்தார்.

2010 இல் நைஜீரிய போதை கும்பல்

2010 ஆம் ஆண்டு திரிஷாவுக்கு நைஜீரிய போதை கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பது போல் பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டது. அப்போது திரிஷா அந்த ஊடகத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார்.

2005 இல் நடந்தது என்ன

2005 ஆம் ஆண்டு திரிஷாவின் படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து பிரபல இதழ் வெளியிட்ட போது திரிஷாவும் அவரது அம்மா உமாவும் வழக்கு தொடர்ந்தனர். சமூகவலைதளங்களில் யார் என்ன பேசினாலும் அவர்களின் தரம் அவ்வளவுதான் என விட்டுச் செல்லும் திரிஷா, ஊடகங்கள், முக்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பேசும் போது தனது கண்டனங்களை உடனே பதிவு செய்கிறார். திரிஷாவின் இந்த தைரியத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+