Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரையை கடந்த மாண்டஸ் புயல்- 12 மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், தீவிர புயலாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து வலுகுறைந்த நிலையில் புயலாக மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.

After Cyclone Mandous cross, IMD Issues Rain alert for 12 Tamilnadu Districts

மாண்டஸ் புயல் உருவானது முதலே தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டிருந்தது. இதனால் மாண்டஸ் புயல் கரையை கடந்த போதும் பெருமளவு சேதங்கள் தவிர்க்கப்பட்டன. இது பொதுமக்களிடையே அரசுக்கு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.

சென்னை மாநகர் மற்றும் புறநகரில் மாண்டஸ் புயல் காரணமாக கனமழை கொட்டியது. ஆனால் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் அமைப்புகள் சீரமைக்கப்பட்டிருந்தன. மாண்டஸ் புயலால் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கான போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தென்காசி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னைக்கு திரும்பினேன். திரும்பிய உடனேயே இரவோடு இரவாக கண்ட்ரோல் ரூமுக்கு நேரடியாகச் சென்று புயல் நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தேன். புயல் எந்த மாவட்டத்திற்கு வரும், மழை எங்கே அதிகம் பெய்யும் என்பதை அறிந்து, அந்தந்த மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவரிடத்திலே காணொலிக் காட்சி மூலமாக நேரடியாகப் பேசி விவரங்களை அறிந்து கொண்டேன். அதற்குப் பிறகு, விடிய விடிய ஒவ்வொரு ஆட்சித் தலைவரிடத்திலும் என்ன நிலைமை, எப்படி இருக்கிறது, புயல் கடந்துவிட்டதா? அதிலும் குறிப்பாக மாமல்லபுரத்தில் அந்தப் புயல் கடக்கிறது என்று சொல்லிய அந்த ஆட்சித்தலைவரிடத்தோடு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு இன்று காலை பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மீனவர்கள் பகுதிக்குச் சென்று அந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகளையும் செய்துவிட்டு திரும்பினேன் சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது என்பதை முதலில் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறினார் என்றார்.

இப்புயலின் போது மின்சாரம் தாக்கி பீகார் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் ஐடி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பொதுவாக பெருமளவு சேதம் தற்போதைய புயலின் போது தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மாண்டஸ் புயலின் தாக்கம் மேலும் 2 நாட்களுக்கு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+