23ம் தேதி இடி ரெய்டு! 5ம் தேதி கோடிக்கணக்கில் தேர்தல் நிதி! யாருக்கு பணம் தந்தார் லாட்டரி மார்ட்டின்
சென்னை; 'லாட்டரி' மார்டின் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் மீது இடி ரெய்டு நடத்திய சில நாட்களில் தேர்தல் நிதிகளை வாரி வழங்கியுள்ளது அம்பலமாகி இருக்கிறது.
'லாட்டரி' மார்டினின் நிறுவனம் ₹1,368 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. 'லாட்டரி கிங்' என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்டினின் ஃபியூச்சர் கேமிங், ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமாக ₹1,368 கோடி ரூபாயை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

பணமோசடி வழக்கில் மார்டின் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சாண்டியாகோ மார்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தற்போது பாஜகவில் உள்ளனர். இவரின் மருமகன் ஆதவ் அர்ஜுன் விசிகவில் பொதுச்செயலாளராக சமீபத்தில் இணைந்தார்.
ரெய்டு பின்னணி; முக்கியமாக லாட்டரி' மார்டினின் நிறுவனம் தங்கள் நிறுவனம் மீது இடி ரெய்டு நடத்திய சில நாட்களில் தேர்தல் நிதிகளை வாரி வழங்கி உள்ளது அம்பலம் ஆகி இருக்கிறது.
லாட்டரி மார்ட்டின் மீது 23-Dec-2021ல் ED ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. அதன்பின் அடுத்த 12 நாட்களில் அதாவது 05-Jan -2022ல் சுமார் 300கோடிக்கும் மேல் மார்ட்டின் நன்கொடை அளித்துள்ளார்.
இதனால் அவர் எந்த கட்சிக்கு பணம் கொடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் இந்த நன்கொடை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.
இத்தனைக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தின் போது பல கோடிகளை கொட்டி கொடுத்துள்ளது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம். சரியாக இடி ரெய்டு நடத்திய சில நாட்களில் தேர்தல் நிதிகளை வாரி வழங்கி உள்ளது அம்பலம் ஆகி இருக்கிறது. இதனால் அவர் யாருக்கு நிதிகளை வாரி வழங்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் பத்திர வழக்கு: தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது.
எவ்வளவு சென்றது; எந்த கட்சி எவ்வளவு பெற்றது என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பாஜகவிற்கே இதுவரை சென்றுள்ளது
அதிகபட்சமாக 11562.5 கோடி ரூபாய் நிதியில் 6566 கோடி ரூபாயை பாஜக நிதியாக பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது
மொத்த தேர்தல் பத்திரங்களில் 46.74 சதவிகிதம் பாஜகவிற்கு சென்றுள்ளது
1093 கோடி ரூபாய் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு நிதியாக சென்றுள்ளது
காங்கிரஸ் கட்சிக்கு 1123 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது
திமுக கட்சிக்கு 617 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது
அதிமுக கட்சிக்கு 6 கோடி ரூபாய் நிதியாக சென்றுள்ளது
இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications