கெஜ்ரிவால் ஓவர்.. அப்படியே தமிழ்நாடு பக்கம் ரேடாரை திருப்பும் டெல்லி.. தேர்தலுக்கு முன்.. பற்றிய தீ
சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கலையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்கிற தகவல்கள் உலா வர தொடங்கி உள்ளன.
லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

கைது: டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளனர். அதற்கான பின்னணி மற்றும் காரணத்தை நாம் பார்க்கலாம்.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் நேற்று மாலை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி தலைவர் அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோர் கூறியிருந்தனர். அதேபோல் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
அதிர்வலைகள்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிர்வுகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது. கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சூழலில், கெஜ்ரிவாலின் கைதை தொடர்ந்து அடுத்த கைது எந்த மாநிலத்தில் இருக்கும் என்கிற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, தேர்தல் நெருங்க நெருங்க கைதுகள் தொடர்வதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள் மத்திய, மாநில உளவுத்துறையினர். குறிப்பாக, தேர்தல் நெருக்கத்தில் திமுக முதல்வர் ஸ்டாலினுக்கு சிக்கலையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்கிற தகவல்கள்தான் தமிழக அரசியல் தலைவர்களோடு தொடர்புடைய மேலிடங்களில் பரவியிருக்கிறது.
சமீபத்தில் ஜி-ஸ்கொயர் உரிமையாளர் பாலா மற்றும் அவரது அலுவலக முக்கியஸ்தர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டுநடத்திய சம்பவம், திமுக மேலிடத்தை தூங்கவிடவில்லை. இது குறித்து, குடும்ப உறவுகள் சிலரிடம் ஆலோசித்துள்ளது திமுக மேலிடம். அவர்களிடம் பதட்டம் இருந்தாலும், சும்மா மிரட்டி பார்க்கிறார்கள் ; எந்த தவறான செயல்பாடுகளும் ஜி-ஸ்கொயரில் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்ததை அடுத்து திமுக மேலிடம் சற்று நிம்மதியடைந்ததாம்.
இன்னொரு பக்கம் அந்த நிறுவனத்தின் பக்கத்திலோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தனியார் நிறுவனம். ரெய்டு வந்தால் எங்களிடம் உள்ள முறையான ஆவணங்களை காண்பிக்க போகிறோம் என்று கூறியுள்ளாராம் .
அரவிந்த் கெஜ்ரிவால் கைது காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான பிரஷர் ஏற்பட்டு உள்ளதாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications