ரூ.3000 கோடியா? ஐடி ரெய்டால் பரபரக்கும் தமிழ்நாடு.. சார்பதிவாளர்கள் டிரான்ஸ்பர் -சென்னையே மாறிடுச்சு
சென்னை: தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்களும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் சட்டவிதிகளை மீறி பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் பல்வேறு குற்றச்சாடுகள் எழுந்து வந்ததன. இந்த நிலையில் சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.2000 கோடி கணக்கில் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல் திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 17 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான தொகை கணக்கில் காட்டப்படவில்லை என்றும், 400 பத்திரப்பதிவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றன.
ஆய்வை தொடர்ந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. வட சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்ட பறக்கும் இடமாக செங்குன்றம் உள்ளது. இங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில்தான் அதிகளவில் பத்திரப்பதிவும் நடைபெற்று வந்தது.
சார்பதிவாளர்கள் அலுவலங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் 55 சார்பதிவாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஏற்கனவே 36 மாவட்டங்களின் சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் பலரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார் அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி.
இதில் குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களுமே வெவ்வேறு இடங்களுக்கு அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளார்கள். அந்த வகையில் மத்திய சென்னை அசோக் நகர் சார்பதிவாளராக வெண்மதி, ஆலந்தூர் சார் பதிவாளராக கற்பகவள்ளி, வேளச்சேரி சார்பதிவாளராக முகமது ரஃபி, தென்சென்னை நீலாங்கரை சார் பதிவாளராக சண்முகம், தாம்பரம் சார் பதிவாளராக சிவகுமார், பல்லாவரம் சார்பதிவாளராக அறிவழகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பூவிருந்தவல்லி சார்பதிவாளராக வாணி, செங்குன்றம் சார்பதிவாளராக புண்ணியமூர்த்தி, குன்றத்தூர் சார் பதிவாளராக வெங்கடேஷ், திருவொற்றியூர் சார் பதிவாளராக திருமாறன், கொன்னூர் சார் பதிவாளராக மோகன சுருதி, காஞ்சிபுரம் எண் 4 இணை சார்பதிவாளராக நெடுஞ்செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றம் நடந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications