Baby boy Madhampatti Rangaraj: "ஆரம்பிக்கலாமா டாடி" 20 நாளுக்கு முன்பே அழைத்த கிரிஸில்டா குழந்தை!
சென்னை: "ஆரம்பிக்கலாமா டாடி" என அண்மையில் ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவை போட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துவிட்டதால் இனி மாதம்பட்டி - ஜாய் போட்ட வழக்கு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி தன்னுடன் வாழ மறுப்பதாக சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே கடந்த 16-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். அப்போது மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்புவதாக ஜாய் தரப்பில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் உரிமையியல் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என அந்த நோட்டீஸில் ஜாய் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கூட சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவச் செலவு வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் ரூ 6.50 லட்சம் பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் எங்களுக்கு, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் எனக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என அந்த இன்ஸ்டா பக்கத்தில் ஜாய் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி ஜாய் கிரிஸில்டா ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் அவரது குழந்தை பேசுவது போல் ஒரு பதிவு இருந்தது. "ஹலோ டாடி மாதம்பட்டி ரங்கராஜ், ரெடியா ஆரம்பிக்கலாமா டாடி, இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு! இப்படிக்கு உங்கள் வாரிசு- மாதம்பட்டி ராஹா ரங்கராஜ் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதே நீதிமன்றம், மகளிர் ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு ஜாய் ்அலைந்தார். தற்போது குழந்தையும் பிறந்துவிட்டது. இனி இந்த வழக்கு என்ன மாதிரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜாய் கேட்டது போல் பராமரிப்புத் தொகையை கொடுக்க மாதம்பட்டி ரங்கராஜ் முன்வருவாரா? இல்லை இந்த வழக்கு இன்னும் நீண்டு கொண்டே இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications