கேரளா, நாகாலாந்து.. பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம்? திமுக அதிரடியா?
சென்னை: கேரளா மாநிலத்தைத் தொடர்ந்து நாகாலாந்து மாநிலமும் மத்திய பாஜக அரசின் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. மத்திய பாஜக அரசை மும்முரமாக எதிர்க்கும் தமிழ்நாடு அரசும் இதேபோல பொது சிவில் சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இந்துத்துவா சிந்தனைதான் பாஜகவின் பல ஆண்டுகால தேர்தல் வாக்குறுதி. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

நாகாலாந்து எதிர்ப்பு: நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரில், பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்கிற கருத்தும் வலம் வருகிறது. இந்த நிலையில் நாகாலாந்து மாநிலத்தின் தனித்துவத்தை, உரிமையை பாதிப்பதாக பொது சிவில் சட்டம் இருக்கும் என்பதால் அதனை நிராகரித்து அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னர் கேரளா மாநில சட்டசபையும் பொது சிவில் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது. மேகாலயா, மணிப்பூர், சிக்கிம் மாநிலங்களும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றன.
திமுக கடும் எதிர்ப்பு: தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. அண்மையில் 22-வது சட்ட ஆணையத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுப்பிய கடிதத்தில் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் அவரவர் பழக்க வழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை திமுக ஆதரித்து வந்துள்ளது.
என்ன பாதிப்பு வரும்?: பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகள் உருவாகும். எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசு உரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்பு சட்டம் வழங்கிய தனிநபர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சி என்பதால், பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது.
சட்டம் ஒழுங்கு பாதிப்பு: இதை அமல்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையது அல்ல. தமிழக மக்கள்தொகையில் இந்துக்கள் 87%, இஸ்லாமியர்கள் 6%, கிறிஸ்தவர்கள் 7% உள்ளனர். அனைவரும் மதங்களை கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய ஒற்றுமைக்கு பொது சிவில் சட்டம் ஊறுவிளைவிக்கும். எனவே, இதற்கு அனுமதி வழங்க கூடாது என தெரிவித்திருந்தார்.
சட்டசபை தீர்மானம்? : இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக ஒரு தீர்மானத்தை ஆளும் திமுக அரசு நிறைவேற்றக் கூடும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சனாதன ஒழிப்பு விவகாரத்தில் மத்திய பாஜக அரசுட்ன் திமுக பகிரங்கமாக உக்கிரமாக மோதுவதால் பொது சிவில் சட்டத்தையும் ஆயுதமாக திமுக கையில் எடுக்கும் என்பது திராவிடர் இயக்கத்தவர் எதிர்பார்ப்பு.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications