சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷாவின் அதே யுக்தி.. திமுகவிற்கு எதிராக பாஜக கொடுத்த டாஸ்க்.. அடுத்தடுத்து சரியும் சீட்டுகள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுகவிற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அமித் ஷா மிகப்பெரிய டாஸ்க் ஒன்றை கொடுத்து இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    பாஜகவில் இணைந்த மற்றொரு திமுக எம்எல்ஏ… சீட் தராததால் அப்செட்!

    ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாஜக பக்கம் தாவுவது வழக்கமாகி வருகிறது. அதிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அடிக்கடி இப்படி பாஜக கேம்பிற்கு தாவி வருகிறார்கள்.

    தற்போது தமிழகத்திலும் இதே கதை நடக்க தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் முக்கியமான சில திமுக நிர்வாகிகள் பாஜக கேம்பிற்கு தாவி விடுவார்களோ என்று எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது... திமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பை தொடர்ந்து இதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    திமுக வலிமை

    திமுக வலிமை

    தமிழகத்தில் திமுகவின் வலிமையை கட்டுப்படுத்தும் விதமாக அந்த கட்சிக்கு முக்கியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தற்போது தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் சிலர் சீட் கிடைக்காத விரக்தியில் உள்ளனர். 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை.. தேர்தலில் தங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்று கட்சிக்குள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    பிளான்

    பிளான்

    எங்களுக்கு பதிலாக வேறு உறுப்பினர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே இவர்களை மாற்ற வேண்டும்.எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி பணிகளை செய்ய மாட்டோம் என்று திமுக தரப்பில் சில நிர்வாகிகள் கட்சிக்கு உள்ளேயே கோஷம் எழுப்ப தொடங்கி உள்ளனர். இதைத்தான் பாஜக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாம்.

    அதிருப்தி

    அதிருப்தி

    ஒவ்வொரு தொகுதியில் இப்படி அதிருப்தியாகி இருக்கும் நபர்களை அமித் ஷா பாஜக வசம் இழுக்க போவதாக கூறப்படுகிறது. எங்கள் கட்சிக்கு வாங்க.. உங்களுக்கு பதவி கொடுக்கிறோம் என்று அதிருப்தியில் இருக்கும் திமுக உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பாஜக இறங்கிவிட்டது என்கிறார்கள். இதன் சின்ன டீசர்தான் தற்போது திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்தது என்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் தொகுதி கிடைக்காத விரக்தியில் இவர் பாஜகவில் இணைந்துவிட்டார். இதேபோல் திமுகவில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நிர்வாகிகளை கொக்கி போட்டு தூக்கும் பிளானில் அமித் ஷா இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் இப்படி விரக்தியில் இருப்பவர்களை பாஜக பக்கம் இழுக்கும் முடிவில் அமித் ஷா இருக்கிறாராம்.

    முதல் விக்கெட்

    முதல் விக்கெட்

    இதில் முதல் விக்கெட்தான் சரவணனென்று கூறப்படுகிறது. இதேபோல் இன்னும் பலரை பாஜக பக்கம் இழுக்க பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு அமித் ஷா டாஸ்க் கொடுத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்களை கொண்டு வாங்க.. தேர்தல் பணிகளை செய்ய திமுகவிடம் ஆள் இருக்க கூடாது. அந்த மாதிரி முக்கியமான நிர்வாகிகளை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்று அமித் ஷா ஆர்டர் போட்டுள்ளார்.

    ஆர்டர்

    ஆர்டர்

    மேற்கு வங்கத்தில் இதேபோலத்தான் முக்கியமான திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை அமித் ஷா பாஜக பக்கம் இழுத்தார். சுவேண்டு அதிகாரி போன்ற மம்தாவின் நெருக்கமான நிர்வாகிகளை பாஜக இப்படித்தான் தங்கள் பக்கம் வளைத்து போட்டது. இதேபோல் மூத்த நிர்வாகிகளை தங்கள் பக்கம் கொண்டு வரும் திட்டத்தை தமிழகத்திலும் பாஜக களமிறக்க உள்ளது.

    English summary
    After MLA Saravanan, BJP may lure many DMK heads to their camp soon ahead of Tamilnadu assembly election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X