30 அம்ச கோரிக்கைகள்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. தொடக்க பள்ளி ஆசிரியர்களின் போராட்டம் ரத்து
சென்னை: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போராட்டம் நடத்த இருப்பதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் அறிவித்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் போராட்டத்தை அறிவித்து இருந்தது. நாளை முதல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று பள்ளிகல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துச்சாமி, தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில் உள்பட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த 30 கோரிக்கைகளில், ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வந்தது. எனினும், அதை வாய்மொழியாகவே தெரிவித்தது. கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்து எழுத்துப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
எனவே திட்டமிட்டபடி நாளை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், இன்று தொடக்க பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசினர். அமைச்சருடனான இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தை ரத்து செய்வதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications