“செல்வப்பெருந்தகை போனில் பேசினார்.. பதிவை நீக்குகிறேன்” விசிக - காங்கிரஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் வெளியிட்ட பதிவை நீக்கியுள்ள விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி, "அலைபேசியில் செல்வப்பெருந்தகை தெரிவித்ததை உளபூர்வமாக நம்புகிறேன். பிறரிடம் நாம் எதிர்பார்ப்பதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என மேன்மைமிகு தலைவரிடம் பாடம் பயின்ற நான் அரசியல் நாகரீகத்தோடு எனது பதிவை திரும்ப பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, கொமதேக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தங்கள் கூட்டணியில் ராமதாஸை இணைக்க பேச்சுவார்த்தையில் திமுக ஈடுப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

After Phone Call With Selvaperunthagai VCK MLA SS Balaji Deletes Post

விசிக அதிருப்தி

இது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைந்தால் விசிக வெளியேறிவிடும் என்று திருமாவளவன் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. ராமதாஸ் உடன் திமுக பேசி வருவதாக திமுக முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

செல்வப்பெருந்தகை பேட்டி

இந்தச் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணிக்குள் வருவதை திமுக தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அவர்தான் கூட்டணிக்கு தலைவர். ராமதாஸ் - திருமாவளவன் இருவரும் நேருக்கு நேராக உட்கார்ந்து பேசினால் போதும், விசிகவின் நிலைப்பாடு நிச்சயம் மாறும் என கூறியிருந்தார்.

விசிக எம்.எல்.ஏ கண்டனம்

இதற்கு விசிக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், "கூட்டணியில் யார் யார் என்பதை திமுக முடிவெடுக்கும் என்பதைத் தான் நாங்களும் சொல்லி விட்டோமே. சாதியவாத, மதவாத சக்திகள் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டை விசிக மாற்றிக் கொள்ளும் என்கிற தோற்றத்தை திணிப்பது நாகரீகமற்ற அரசியல் அணுகுமுறை." எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

விடுதலை சிறுத்தகளை கட்சி எம்எல்ஏக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி ஐடி விங் தலைவர் நபீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் கூறாத கருத்தை கூறியதாகப் பரப்பி, அதனை அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கி, உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பதிவை நீக்கிய எஸ்.எஸ்.பாலாஜி

இந்நிலையில், செல்வப்பெருந்தகைக்கு கண்டனம் தெரிவித்த எக்ஸ் தள பதிவை நீக்கிய விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, "அரசியல் நாகரிகத்தோடு செல்வப்பெருந்தகை மீதான கண்டன பதிவைத் திரும்பப் பெறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ். பாலாஜி தனது பதிவில் "காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகையின் பேட்டி காணொளியில் வந்த ஒர் பகுதியின் அடிப்படையிலும், அரசியல் நிலைபாடுகளில் தலைவர் என்றைக்கும் நேர்மையாக செயல்படுபவர் என்கிற நிலையில் அதற்கு கேடு விளைவிக்க கூடியதாக அந்த பகுதி இருப்பதை உணர்ந்து எனது தனிப்பட்ட கருத்தை பதிவு செய்தேன்.

அரசியல் நாகரீகத்தோடு

எந்த நிலையிலும் தலைவரின் நிலைபாட்டை தான் கேள்விகுறியாக்கவில்லை என்றும், அப்படி அது வெளிப்பட்டு இருந்தால் அது பேட்டியினை எடிட் செய்தவிதமாக இருக்கும் என என்னிடம் அலைபேசியில் செல்வப்பெருந்தகை தெரிவித்ததை உளபூர்வமாக நம்புகிறேன்.

பிறரிடம் நாம் எதிர்பார்ப்பதை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என மேன்மைமிகு தலைவரிடம் பாடம் பயின்ற நான் அரசியல் நாகரீகத்தோடு எனது பதிவை திரும்ப பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+