உதிரும் கட்டிடங்கள்: புளியந்தோப்பு மட்டுமல்ல, ராமாபுரம் குடியிருப்பிலும் தரமில்லை- மக்கள் குமுறல்!
சென்னை: சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளை தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் தரமற்று கட்டப்பட்டிருப்பதாக குடியிருப்புவாசிகள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளது என புகார் எழுந்தது.
இதைதொடர்ந்து அமைச்சர்கள் ஆய்வு செய்து ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு செய்தனர்.

மோசமான கட்டிடம்
இந்த நிலையில், சென்னை ராமாபுரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளும் தரமற்று இருப்பதாக அந்த குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கே.கே நகர் கோட்டம் மூலம், ராமாபுரம் பாரதி சாலையில் 78 கோடியே 44 லடசம் மதிப்பில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள், சுயநிதிபிரிவு மூலம் கட்டி பயனாளர்களுக்கு 01/11/2019 அன்று ஒப்படைப்பு செய்யப்பட்டது. இதில் 2 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது, இந்த குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் மணலும் இறுக்கமில்லாமல் இருக்கின்றன .

அச்சத்தில் மக்கள்
கட்டடத்தின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள்,கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்தும் சிதிலமடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும், இங்குள்ள அனைவரும் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே கட்டுமானத்தின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

செங்கல்பட்டு சம்பவம்
இதனிடையே, செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாய் சேய் நல பிரிவில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் படுக்கையில் இருந்த தாய்யும், குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்சேய் நல பிரிவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. இதில் செங்கல்பட்டு மாவட்டம் தவிர்த்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் . சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிருஷ்டவசமாக தப்பினர்
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் எடப்பாளையம் பகுதியை சார்ந்தவர் தனசேகரன் - லோகேஸ்வரி தம்பதி இவர்களுக்கு கடந்த 19ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்ததும், தாய் சேய் முதல் மாடியில் உள்ள வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர் இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வார்டில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து குழந்தை தாய் படுத்திருந்த கட்டில் மீது விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யார் மீது விழாமல் விழுந்ததால் தாய் குழந்தை சிறு காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மக்கள் அதிர்ச்சி
இதுகுறித்து, செங்கல்பட்டு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் உடனடியாக அந்த வார்டில் உள்ள சிகிச்சை பெற்று வரும் தாய் மற்றும் தாய் மற்றும் சேய் ஆகியோரே அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். நேற்று, இப்படித்தான், கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. அவசரகதியில் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடைபெற்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். அடுத்தடுத்து தமிழகத்தில் கட்டுமானங்கள் சரிவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications