திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாத மா.செக்கள்.. கோபத்தில் ரஜினிகாந்த்.. என்ன நடக்கிறது மக்கள் மன்றத்தில்?
நேற்று செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த மூன்று திட்டங்களை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை: நேற்று செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த மூன்று திட்டங்களை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு முதல்வர் ஆசை கிடையாது. நான் தொடங்கும் கட்சிக்கு தலைவராக இருப்பேன். ஆனால் ஆட்சிக்கு தலைவராக இருக்க மாட்டேன். அதற்கு வேறு ஒரு நல்ல நபரை தேர்வு செய்யலாம் என்று ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு எடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் மூன்று முக்கியமான திட்டங்களை பரிந்துரை செய்தார். தான் அரசியலுக்கு வந்தால், மூன்று திட்டங்களை செயல்படுத்துவேன், என்று அவர் பட்டியலிட்டார்.

என்ன திட்டங்கள்
1. தேர்தல் நேரத்தில் கட்சியில் பதவிகளை உருவாக்கிவிட்டு, தேர்தலுக்கு பின் அந்த பதவிகளை நீக்கிவிட
வேண்டும். அத்தியாவசியமான பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தேவையற்ற கட்சி பதவிகளை தேர்தல் முடிந்ததும் நீக்க வேண்டும் .
2. எம்.பி, எம்எல்ஏ பதவிகளுக்கு இளைஞர்களை அழைத்து வர வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று அனுபவம் வாய்ந்த பலரை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்.
3.மூன்றாவதாக கட்சிக்கு ஒரு தலைமை , ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை கொண்டு வர வேண்டும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதைத்தான் பேசினார்
கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசினார். அப்போதே ரஜினிகாந்த் இந்த மூன்று திட்டங்களை மாவட்ட செயலாளர்களிடம் கூறிவிட்டார். அதாவது , இந்த மூன்று திட்டம்தான் எனது முடிவு. இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும். நான் முதல்வராக முடியாது, எனக்கு விருப்பம் இல்லை என்று ரஜினிகாந்த் மிகவும் கண்டிப்பாக முதல் மீட்டிங்கிலேயே கூறி இருக்கிறார்.

முடிவை ஏற்கவில்லை
ஆனால் இந்த மீட்டிங்கிலேயே பெரும்பாலான மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் இந்த முடிவை எதிர்த்து இருக்கிறார்கள். உங்களை நம்பித்தான் மக்கள் வாக்களிப்பார்கள் . வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என்று கூறினால் மக்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் கூட வாக்களிக்க மாட்டார்கள். இது தேவையில்லாத ரிஸ்க் என்று மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் ரஜினிகாந்த் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன செய்தார்
அப்போதே ரஜினிகாந்த் இதனால் கோபம் அடைந்தார் என்கிறார்கள். இதைத்தான் ரஜினிகாந்த், வெளியே வந்து எனக்கு ஏமாற்றம், மனவருத்தம் என்று கூறினார். அதேசமயம் அவர் தனது திட்டத்தில் இருந்து பின் வாங்கவில்லை. தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என்பதில் ரஜினிகாந்த் உறுதியாகவே இருந்தார். இதனால்தான் மீண்டும் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் இரண்டாவது முறையாக ஆலோசனை செய்தார். இதில் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் தெளிவாக கூறிவிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
அதன்பின்தான் செய்தியாளர்களை நேற்று ரஜினிகாந்த் சந்தித்தார். மாவட்ட செயலாளர்களிடம் தான் சொன்ன திட்டங்களை அப்படியே செய்தியாளர்களிடமும் ரஜினிகாந்த் சொன்னார். அது மட்டுமின்றி, தொண்டர் என்பவர் தலைவர் சொல்வதை கேட்க வேண்டும். தொண்டர்கள் சொல்வதை தலைவர் கேட்க கூடாது என்று வெளிப்படையாக மாவட்ட செயலாளர்களை மேடையிலேயே ரஜினிகாந்த் கண்டித்தார். இதுதான் தற்போது மாவட்ட செயலாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எப்படி நடக்கும்
ரஜினிகாந்த் இப்படி முடிவு எடுத்தது சரியில்லை. முதல் விஷயம் கட்சியில் யாருக்கும் பதவி இல்லை என்கிறார். 40 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் ரசிகர் மன்றத்தில் இருக்கிறோம். இந்த மக்கள் மன்றத்தை வளர்த்தது நாங்கள்தான். ரசிகர்களை ஒன்றாக சேர்த்து, பல பணிகளை செய்து இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு வயதாகிவிட்டது என்பதால் பதவி கிடையாது என்கிறார். வெளி நபர்கள், புதிய நபர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்கிறார். இதை ஏற்க முடியாது என்று மாவட்ட செயலாளர்கள் சிலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

என்ன பதவி
அதோடு ரஜினியை முன்னிறுத்தாமல் தேர்தலில் வெல்ல முடியாது. ஆனால் இதை ரஜினி ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் ஆலோசனையில் சொன்ன கருத்துக்கள் எதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய நிலைப்பாட்டை விட்டு இறங்காமல், அப்படியே பிரஸ் மீட்டில் அறிவித்துவிட்டார் என்று சிலர் மாவட்ட செயலாளர்கள் புலம்பி வருகிறார்கள். இதை வெளிப்படையாக ரஜினியிடம் நேற்று பேசி உள்ளனர்.

ரஜினி கோபம்
நேற்று பிரஸ் மீட்டிற்கு பின் ரஜினிகாந்த் தனது மாவட்ட செயலாளர்களை மீண்டும் சந்தித்தார். அப்போதுதான் மாவட்ட செயலாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் ரஜினி இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் என் முடிவு, செய்தியாளர் சந்திப்பில் அறிவித்ததுதான் இறுதி முடிவு. இதில் மாற்றம் இல்லை, இதுதான் இறுதி முடிவு என்று ரஜினிகாந்த் கோபமாக மாவட்ட செயலாளர்களிடம் தெரிவித்ததாக கூறுகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications