இன்று முதல் அடியோடு குறையும்.. வீட்டு லோன் வட்டி! மேஜர் வங்கிகள் எடுத்த முடிவு.. ஆர்பிஐ போட்ட ஆர்டர்
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் எனப்படும் வட்டி விகிதக் குறைப்பை தொடர்ந்து, நாட்டின் முன்னணி வங்கிகளான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இக்குறைப்புகள் இன்று முதல் அமலுக்கு வரும். இதனால், புதிய மற்றும் தற்போதுள்ள கடன் வாங்குபவர்களின் மாதத் தவணைகள் (EMIs) குறைந்து, கடன்கள் மலிவாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, மும்பையில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில் பொதுத்துறை மற்றும் சில தனியார் துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்தார். நீண்டகால பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள Repo Rate வட்டி விகித குறைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்குமாறு அவர் அப்போது வலியுறுத்தினார்.

பிப்ரவரி 2025 முதல், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 125 அடிப்படை புள்ளிகள் குறைத்து, அதை 5.25% ஆக கொண்டு வந்துள்ளது. இது பொருளாதார செயல்பாடுகளைத் தூண்டும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா 8% மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ ரேட் குறைப்பு
கடந்த வாரம், ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை நான்காவது முறையாக 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து நீண்டகால பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள Repo Rate வட்டி விகித குறைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அலையவிடாமல் அவர்களுக்கு உடனே பலனை வழங்க வேண்டும். அப்போதுதான் அதன் பலன்கள் எல்லோருக்கும் கிடைக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தினார்.
ஸ்டேட் வங்கி முக்கிய முடிவு
இதையடுத்து ஸ்டேட் வங்கி, தனது EBLRஐ (புற நிலை கணக்கீட்டுடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதம்) 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.90% ஆக நிர்ணயித்துள்ளது. கடந்த வாரம், ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதத்தை நான்காவது முறையாக 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்ததற்கு இது பதிலளிக்கும் விதமாகும். வங்கி, தனது MCLR விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்ததன் மூலம், ஒரு வருட MCLR 8.75% இலிருந்து 8.70% ஆகக் குறையும். மேலும், குறைந்தபட்ச வட்டி விகிதம் (Base Rate / BPLR) 10% இலிருந்து 9.90% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரும்.
ஸ்டேட் வங்கி, இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்திற்கான நிலையான வைப்பு நிதி வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 6.40% ஆக நிர்ணயித்துள்ளது. 'அம்ரித் வ்ருஷ்டி' (444 நாட்கள்) சிறப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமும் 6.60% இலிருந்து 6.45% ஆகத் திருத்தப்பட்டுள்ளது. மற்ற வைப்பு நிதி விகிதங்கள் மாற்றப்படவில்லை.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனது RLLR (ரெப்போவுடன் இணைந்த கடன் விகிதம்) ஐ 25 அடிப்படைப் புள்ளிகள் (8.35% இலிருந்து 8.10%) குறைத்துள்ளது. இதன் மூலம், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும், அதன் MCLR விகிதத்தை மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான தவணைக்காலங்களுக்கு 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்க ALCO ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வட்டி குறைப்புகளால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்குவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் உட்பட பல தரப்பினரும் பலன் பெறுவர். இவர்களுக்கு நிதிச் சுமை குறைந்து, நடைமுறை மூலதனத் தேவைகள் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இது உதவும் என வங்கிகள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications