ராவணனை நம்பினால் ஆயுசுக்கும் அசோகவனம்தான்! தீக்குளித்தாலும் அயோத்தி திரும்ப முடியாது! இன்பதுரை
சென்னை: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள நிலையில், ராமனை நம்பினால் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டக் கூடாது என மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் இன்பதுரை கூறியிருப்பதாவது: ராமனை நம்பினால் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டக் கூடாது! ராவணனின் கபட சந்நியாசி வேஷத்தை நம்பி சென்றால் ஆயுசுக்கும் அசோகவனம்தான்! தீக்குளித்தாலும் இனி அயோத்திக்கு திரும்ப முடியாது! இவ்வாறு இன்பதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் குறித்து தலைமை கழக அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற காரணத்தாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் இன்று (நேற்று)முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது விதிகளை மீறி நடந்துள்ளது என்றும் 53 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வந்த தனக்கு நோட்டீஸ் கூட அனுப்பாமல் நீக்கியது கட்சி விதிகளுக்கு முரணானது என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ராமனை நம்பினால் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டக் கூடாது! ராவணனின் கபட சந்நியாசி வேஷத்தை நம்பி சென்றால் ஆயுசுக்கும் அசோகவனம்தான்! தீக்குளித்தாலும் இனி அயோத்திக்கு திரும்ப முடியாது!
— I.S.INBADURAI (@IInbadurai) November 1, 2025
மேலும் இந்த நீக்கத்தை சட்டரீதியில் அணுக போவதாகவும் அவர் அதிமுகவில் தொடர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் பேட்டி குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கட்சி விதிகளுக்குள்பட்டே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என பொதுக் குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக் குழு தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டால் என்ன நடவடிக்கை பாயும் என்பது 53 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் அவருக்குத் தெரியாதா?
ஜெயலலிதாவின் விசுவாசி என்கிறார், பிறகு அவரது அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் ஏன் நீக்கப்பட்டார். விசுவாசியை யாராவது நீக்குவார்களா? ஜெயலலிதாவால் நீக்கப்பட்டாலும் நான் ஆட்சிக்கு வந்ததும் செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்த்தோம்.
செங்கோட்டையன் வன்மத்துடன் செயல்பட்டு வரும் நிலையில் அவரை கட்சியில் எப்படி வைத்திருப்பது? அதிமுகவுக்கு துரோகம் செய்ததால் செங்கோட்டையனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சிக்காக உழைக்காமல் துரோகம் இழைத்தால் இந்த நிலைதான் ஏற்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்பதுரை தனது ட்விட்டரில் செங்கோட்டையன் நீக்கம் குறித்து அவர் பெயரை வெளியிடாமல் குறிப்பிட்டுள்ளார். அதில், ராமனை நம்பினால் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டக் கூடாது! ராவணனின் கபட சந்நியாசி வேஷத்தை நம்பி சென்றால் ஆயுசுக்கும் அசோகவனம்தான்! தீக்குளித்தாலும் இனி அயோத்திக்கு திரும்ப முடியாது! என தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications