ஏறிய வேகத்தில் இறங்கிய தக்காளி விலை! ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா? மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது. தக்காளி விலை நேற்று முன்தினம் கிலோ ரூ.50 வரை விற்பனை ஆன நிலையில் தற்போது கிலோ ரூ.35 க்கு விற்பனை ஆகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன.

கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளிலிருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த மாதம் மொத்த விலையில் கிலோ ரூ.12 வரை விற்கப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.60 வரை உயர்ந்து இருந்தது.
பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தக்காளியின் வரத்து சரிந்து விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலையானது மேலும் உயரும் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில், திடீரென நேற்று தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளி விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு சந்தையில் 50 ரூபாயில் இருந்து 15 ரூபாய் குறைந்து 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை தொடர்ந்து குறையுமா.? அல்லது நாளைய தினமே அதிகரிக்க வாய்ப்புள்ளதா? என்பதை தக்காளி வரத்தை பொறுத்தே கணிக்க முடியும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.40, முருங்கைக்காய், பாகற்காய் தலா ரூ.30, அவரைக்காய் ரூ.25, வெண்டைக்காய், கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.16, பீட்ரூட், நூக்கல், பெரிய முள்ளங்கி, வெங்காயம் தலா ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.8 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது. இதனிடைய பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications