அமலாக்கத்துறை ரெய்டு! பராசக்தி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மாயம்? சோதனைக்கு பின் தலைமறைவானோர் லிஸ்ட்
சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை சார்பாக கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பாக டாஸ்மாக் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதுமட்டுமல்லாமல் பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தனியார் மதுபான நிறுவன நிர்வாகி மேகநாதன், தொழிலதிபர் தேவக்குமார், தொழிலதிபர் ரத்தீஷ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. 2 நாட்கள் நடந்த சோதனையின் முடிவில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளி வந்தது.

அதேபோல் டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர் சுமன் மற்றும் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனிடையே டாஸ்மான் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் ரத்தீஷ் ஆகியோர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள். அதிலும் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் முன் நின்று நடத்தி கொடுத்தனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்காக ரத்தீஷ் வீட்டிற்கு அதிகாரிகள் வருவதற்கு முன்பாக, அவர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். இரவு 10 மணி வரை ரித்தீஷ் வருகைக்காக காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பின்னர் வீட்டிற்கு சீல் வைத்து அதன் சாவியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர் ரத்தீஷ்.
அதேபோல் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனும் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் தலைமறைவாகி உள்ள நிலையில், அமலாக்கத்துறை அவர்களின் வெளிநாடு பயணம் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக தெரிகிறது. இதனால் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு அமலாக்கத்துறை தயாராகிவிட்டதாக சொல்லப்படுவதால், முக்கிய அரசியல் புள்ளிகளும் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications