வந்தே பாரத் எல்லாம் பழசு.. சென்னைக்கு வருகிறது "புல்லட் ரயில்".. அதுவும் எந்த ரூட்டில் தெரியுமா?
சென்னை: இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் விரைவில் புல்லட் ரயில் சேவைகளை தொடங்கவும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறதாம்.
கடந்த சில மாதங்களாகவே ரயில் வேகத்தை அதிகரிப்பதற்காக, ஐஐடி-மும்பையுடன் இணைந்து நேர அட்டவணையை மாற்றுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்துள்ளது. பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் சேவைகளாக மாற்றப்படுகின்றன, மேலும் பயண நேரத்தை விரைவுபடுத்த எக்ஸ்பிரஸ் சேவைகள் சூப்பர்ஃபாஸ்ட் சேவைகளாக மேம்படுத்தப்படுகின்றன.
அதிக வேக ஆற்றலை வழங்கும் வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் ரயில்வே திரையில் புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும், துரிதப்படுத்துவதற்கும் வந்தே பாரத் முக்கிய பங்களித்துள்ளது. ஜூலை 21, 2023 நிலவரப்படி, இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் 50 வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜூலை 21, 2023 நிலவரப்படி, இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் 50 வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் விரைவில் புல்லட் ரயில் சேவைகளை தொடங்கவும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறதாம்.
தற்போது புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே கட்டப்பட உள்ளது . இதற்கான முதல் கட்ட பணிகள் மட்டுமே தொடங்கி உள்ளன. ஜப்பான் அரசுடன் இணைந்து முதல் கட்ட பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் தேசிய ரெயில் பிளான் சார்பாக எதிர்காலத்தில் 7 ரூட்களில் புல்லட் ரயில்கள் கொண்டு வரப்பட உள்ளன,
அதன்படி டெல்லி - வாரணாசி
டெல்லி - அகமதாபாத்
மும்பை நாக்பூர்
மும்பை - ஹைதராபாத்
சென்னை - பெங்களூர் - மைசூர்
டெல்லி - அமிர்தசரஸ்
வாரணாசி - ஹவுரா
ஆகிய ரூட்டில் இந்த புல்லட் ரயில்கள் கொண்டு வரப்பட உள்ளன., சென்னை - பெங்களூர் - மைசூர் சேவை தமிழ்நாட்டின் முதல் புல்லட் சேவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வந்தே பாரத்: தமிழ்நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத்திற்கு இடையே இந்த புல்லட் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
திருநெல்வேலி ரயில்: வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும்.
குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் அக்டோபருக்கு பதிலாக ஆகஸ்ட் மாதமே ரயில் சேவை தொடங்கும் என்கிறார்கள். சென்னை - திருநெல்வேலிக்கு 7 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications