அதகளம்...நிரந்தர பொதுச்செயலாளரே-தலைமையேற்க வருக... அதிமுக தலைமை அலுவலகம் அருகே சசிகலா ஆதரவு போஸ்டர்!
சென்னை: அதிமுகவின் சட்டசபை குழு தலைவர் பதவி யாருக்கு என்கிற அக்கப்போருக்கு முடிவு தெரியவில்லை. இந்த நிலையில் அதிமுகவுக்கு தலைமையேற்க வருக வருக! என சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தொடங்கிய அதிமுகவின் சலசலப்பு இப்போது பகிரங்கமாக வெடித்துள்ளது. அதிமுகவின் சட்டசபை குழு தலைவர் பதவிக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே மல்லுக்கட்டுகின்றனர்.
இதனால் சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. சென்னையில் மீண்டும் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படுமா? என்பது தெரியாத நிலைதான் உள்ளது.

ஓபிஎஸ் தரப்பு பிடிவாதம்
ஏற்கனவே முதல்வர் வேட்பாளராக முயன்ற ஓபிஎஸ் தரப்பு இம்முறை அவ்வளவு எளிதாக சட்டசபை குழு தலைவர் பதவியை விட்டுத்தராது என்றே தோன்றுகிறது. இதனை சூசகமாக உணர்த்தும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் முழு லாக்டவுன் அறிவிப்பை தனியே அறிக்கை வெளியிட்டு வரவேற்றார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் தனி அறிக்கை
பொதுவாக அதிமுக லெட்டர் பேடில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிடுவது வழக்கம். இதனை மாற்றி அதிமுக லெட்டர் பேடும் இல்லாமல், ஈபிஎஸ் கையெழுத்தும் இல்லாமல் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டது அந்த கட்சியில் உச்சகட்ட குழப்பம், மோதல்கள் வெடித்திருப்பது பகிரங்கப்படுத்தி இருக்கின்றன.

ஓபிஎஸ் தனி அறிக்கை
பொதுவாக அதிமுக லெட்டர் பேடில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிடுவது வழக்கம். இதனை மாற்றி அதிமுக லெட்டர் பேடும் இல்லாமல், ஈபிஎஸ் கையெழுத்தும் இல்லாமல் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டது அந்த கட்சியில் உச்சகட்ட குழப்பம், மோதல்கள் வெடித்திருப்பது பகிரங்கப்படுத்தி இருக்கின்றன.

அதிருப்தியில் சீனியர்கள்
இன்னொரு பக்கம், தேர்தல் உள்ளடி வேலைகள் செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி சீனியர்கள் விரும்புகின்றனர். ஆனால் இப்போதைய நிலையில் அதற்கான வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை என்பதால் அந்த சீனியர்களும் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

சசிகலா ஆதரவு போஸ்டர்கள்
அதிமுகவில் படுகுழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே சசிகலாவை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளரே.. அதிமுகவின் தலைமையேற்க வருக வருக என அந்த போஸ்டரில் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு ஒட்டிய போஸ்டரா?
ஈபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்கிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்பு சசிகலாவை சேர்க்க வேண்டும்; அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என குரல் கொடுக்கிறது. இதனால் சசிகலா ஆதரவு போஸ்டர்களை ஓபிஎஸ் தரப்புதான் ஒட்டி வெறுப்பேற்றி இருக்கிறார்கள் என கருதுகிறது ஈபிஎஸ் தரப்பு.

நீடிக்கும் குழப்பங்கள்
சட்டசபை தேர்தலுக்கு முன்னரே சசிகலாவை ஆதரித்து நிறைய இடங்களில் அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டினர். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இப்போது மீண்டும் சசிகலா ஆதரவு போஸ்டர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. தற்போதைய நிலையில் அதிமுகவுக்குள் நிகழும் மோதல்கள் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடாது என்பதையே காட்டுகின்றன.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications