பர்ஸ்ட் ஆக்சன் யார் மீது? நானா கூட இருப்பேன்? ஆளுநரால் பதற்றத்தில் எடப்பாடி.. ஸ்டாலினின் பக்கா மூவ்!
சென்னை: ஆளுநர் ரவி இந்த மாத இறுதிக்குள் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஒப்புதல் வழங்க நேரிடும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுகவில் யார் மீது முதல் ஆக்சன் எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நேற்று ,முதல்நாள் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையான கண்டங்களை ஆளுநர் ரவிக்கு எதிராக வைத்தார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
காரணம் ஏதும் கூறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை, மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பியதால் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். காரணம் ஏதும் கூறாததால், மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநரால் அனுப்பி வைக்க முடியாது என்று கண்டனம் வைத்தது.

இந்த மாத இறுதிக்குள் நடவடிக்கை; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மற்ற விசாரணைகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவோம் என்றும் கூறியுள்ளார். இவை ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய கருத்தால், தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டிய நிலைக்கு ஆளுநர் தள்ளப்பட்டுள்ளார்.
( நிமிர்ந்து பார்க்கும் வடசென்னை! ஸ்டாலின் இறக்கிய 2 மாஸ்டர் பிளான்! அந்த காலம் எல்லாம் மலையேறிடுச்சே! )
ஆளுநர் ரவி இந்த மாத இறுதிக்குள் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஒப்புதல் வழங்க நேரிடும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுகவில் யார் மீது முதல் ஆக்சன் எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யார் மீது நடவடிக்கை'; இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பேசி உள்ளாராம். அதில்.. யார் மீது முதல் ஆக்சன் என்று தெரியவில்லை. கொங்கு மண்டலத்திற்குத்தான் குறி வைப்பார்கள். முடிந்தால் என் மீது கூட ஆக்சன் எடுப்பார்கள். கொடநாடு வழக்கில் என் மீது கூட ஆக்சன் எடுக்க வாய்ப்பு உள்ளது.
செந்தில் பாலாஜியை டெல்லி கைது செய்தது போல.. நம்மை குறி வைக்கலாம். அதற்கு பழிவாங்கும் விதமாக நம் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளது, என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாராம்.

திமுக லிஸ்ட்: இன்னொரு பக்கம் ஸ்டாலின் இது தொடர்பாக லிஸ்ட் எடுக்க தயாராக இருக்கிறாராம். ஆளுநர் அனுமதி அளித்ததும் மாஜிக்கள் யார் மீது முதலில் வழக்கு பதியலாம். யார் மீதெல்லாம் ஆக்சன் எடுக்கலாம் என்ற திட்டத்தில் ஸ்டாலின் இருக்கிறாராம்.
இதற்காக பெரிய லிஸ்ட் ஒன்றை எடுக்க ஸ்டாலின் தயாராகி வருகிறாராம். ஆளுநர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் சில பூகம்பங்கள் வெடிக்கலாம் என்கிறார்கள்.,
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள்












Click it and Unblock the Notifications