Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Samantha: சமந்தா- ராஜ் நிடிமோருவுக்கு இடையே இத்தனை வயது வித்தியாசமா? குமுறும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமோருவும் நேற்றைய தினம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இடையே இருக்கும் வயது வித்தியாசம் என்ன என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

நடிகை சமந்தா ருத்பிரபு திருமணம்தான் தற்போது ஹாட்டாப்பிக்காக இருக்கிறது. இவர் தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவை ஈஷா மையத்தில் நடந்தது.

samantha rajnidimoru marriage

சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் கடந்த சில மாதங்களாக காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் இதை ஆரம்பத்தில் மறுத்த சமந்தா, பிறகு இந்த கிசுகிசுக்களுக்கு பதிலடி கொடுக்காமல் அமைதியாக இருந்தார்.

முதல் மனைவி போஸ்ட்

இவர்களது திருமணம் நேற்று நடந்த நிலையில் நேற்று முன் தினம் ராஜ் நிடிமோருவின் முதல் மனைவி ஷியாமிலி, சமூகவலைதளத்தில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் "விரக்தியின் விளிம்பில் உள்ளவர்கள் அவநம்பிக்கையான செயல்களைத்தான் செய்வார்கள்" என எழுத்தாளர் மைக்கேல் புரூக்ஸின் வரிகளை குறிப்பிட்டிருந்தார்.

விவாகரத்து

சமந்தா, தெலுங்கு படத்தில் நடித்த போது தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

நாகசைதன்யா- துலிபாலா திருமணம்

இந்த நிலையில் கடந்த ஆண்டு நாக சைதன்யா, துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது சமந்தாவும் பழசை மறந்துவிட்டு புதியதொரு வாழ்க்கையை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என அவரது நலம் விரும்பிகள் தெரிவித்திருந்தனர். அப்போது மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

தி பேமிலி மேன்

இந்த நிலையில்தான் "தி பேமிலி மேன்" படத்தில் நடித்த போது இயக்குநர் ராஜுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. அவர்களது புகைப்படங்களும் வைரலாகி வந்தன. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் இருவரும் கோவை ஈஷா மையத்தில் பைரவி சன்னதியில் திருமணம் செய்து கொண்டனர். ராஜும் விவாகரத்து ஆனவர்தான்.

யார் பங்கேற்பு

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு அழைப்பிதழ்கள் அடித்தார்களா என்று கூட தெரியவில்லை.

சமந்தா- ராஜ்

எனினும் சமந்தா ரசிகர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. அதாவது நடிகை சமந்தாவுக்கு தற்போது 38 வயதாகிறதாம். ஆனால் ராஜ் நிடிமோருவுக்கு தற்போது 46 வயதாகிறது. அதாவது இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் 8 ஆண்டுகள் ஆகும். அதே வேளையில் நாகசைதன்யாவை சமந்தா திருமணம் செய்த போது, இருவருக்கும் இடையே 6 மாதம்தான் வித்தியாசம்!

வயது வித்தியாச திருமணம்

அண்மைக்காலமாக திரைத்துறையில் திருமணம் செய்து கொண்டவர்கள், இனி திருமணம் செய்து கொள்வோருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ளும் சாய் தன்ஷிகாவிற்கும் விஷாலுக்கும் இடையே 12 ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது. சித்தார்த்- அதிதி ராவுக்கு இடையே 7 வயதும், ஆர்யா- சாயிஷாவுக்கு இடையே 17 வயதும் சயீப் அலிகான்- கரீனா கபூருக்கு இடையே 10 வயதும் வித்தியாசம் இருக்கிறது. எனவே வயது என்பது ஒரு எண் மட்டும்தான். அதையெல்லாம் தாண்டி நிலைத்து நிற்கக் கூடியது காதலும் அன்பும்தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+