இனிதான் இருக்கு 'சுட்டெரிக்கும் வெயில்' 4ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம்..தப்பிக்க என்ன செய்யலாம்
சென்னை: நடப்பு ஆண்டில் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வருகிறது. வழக்கமாக கோடை காலம் மார்ச் மாத இறுதியில் தொடங்கும். பின்னர் படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும். அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் மே மாதத்தில் தொடங்கும்.

ஆனால் நடப்பு ஆண்டு பிப்ரவரி இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் தகிக்கத் தொடங்கி விட்டது. வெயிலின் உஷ்ணத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இன்னும் சொல்லப்போனால் ஏப்ரல் மாதத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. ஈரோடு, சேலம், கரூர், தருமபுரி, மதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஈரோடு, கரூரில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திர வெயில் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கிறதே... மே மாதம் எப்படி இருக்குமோ என மக்கள் புலம்பாத குறைதான்.. மே மாதம் துவங்கி விட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்க உள்ளது.
அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கோடை வெயில் உச்சத்தை தொடும். இந்த வெயில் காலம் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் என்பதை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்தாவிட்டாலும் மே மாதத்தின் இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
எனவே, இந்த கால கட்டத்தில் வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதோடு அனல் காற்றுடன் அதிகபட்சம் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் அக்னி நட்சத்திர காலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பமாக உள்ளது.

அதற்கு முன்பாக வேலூரில் கடந்த 2003 ஆம் ஆண்டு 113 டிகிரி வெப்பம் பதிவானது. நடப்பு ஆண்டில் வழக்கமாகவே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் , அக்னி நட்சத்திரம் காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்கவேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
அதேபோல், அவசியம் இன்றி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெயில் காலத்தில் வெளியே போனாலும் தலையில் தொப்பி போன்றவற்றை அணிந்து செல்வது நல்லது. அதுபோக இளநீர், தர்ப்பூசணி, சர்பத் போன்ற குளிர்ச்சியான உணவு பதார்த்தங்களையும் சாப்பிட்டு உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications