சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுட்டெரிக்கும் சூரியன்...தண்ணியை குறைத்து தண்ணீரை அதிகமாக குடியுங்கள் - மா.சுப்ரமணியன் அட்வைஸ்

கோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டிகளுடன் வெளியே செல்லுங்கள். தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோடைகாலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும்.

Google Oneindia Tamil News

சென்னை : வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்றும் மா.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recommended Video

    கொளுத்தும் வெயில்... தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம்.. மக்களுக்கு அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்!

    தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் ஆரம்பித்து விட்டது. கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை மாநகராட்சி சார்பில் கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

    அது ரொம்ப ஆபத்தான விஷயம்.. சுப்பிரமணியன் சுவாமியே சொல்லிட்டாரு..கோவையில் கொந்தளித்த திருமாவளவன் அது ரொம்ப ஆபத்தான விஷயம்.. சுப்பிரமணியன் சுவாமியே சொல்லிட்டாரு..கோவையில் கொந்தளித்த திருமாவளவன்

    வெப்பத்தின் தாக்கம் அதிகம்

    வெப்பத்தின் தாக்கம் அதிகம்

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வேலூர், மதுரை, கரூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் நிலவுகிறது. எனவே கோடை காலம் முடியும் வரை மக்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வெளியே செல்லுங்கள். மது குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தண்ணீர் குடியுங்கள்

    தண்ணீர் குடியுங்கள்

    தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோடைகாலத்தில் போதிய அளவு நீர் குடிக்க வேண்டும். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். எலுமிச்சை உள்ளிட்ட பல சாறுகளை பகிருங்கள் என்றார்.

    வெளியே வரவேண்டாம்

    வெளியே வரவேண்டாம்

    அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். முழு உடலையும் மூடும் வகையில் ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள். காலனி இல்லாமல் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

    தயார் நிலையில் மருத்துவமனைகள்

    தயார் நிலையில் மருத்துவமனைகள்


    ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில் உள்ளதால் வாகனங்களின் சீட்டில் துண்டை போட்டு வையுங்கள். வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது குழந்தைகளை அமர வைக்க வேண்டாம். வெயில் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

    எக்ஸ்இ கொரோனா இல்லை

    எக்ஸ்இ கொரோனா இல்லை


    தமிழகத்தில் இதுவரை எக்ஸ்இ கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதுவரை 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் 1,600 இடங்களில் நடைபெற்றது. சென்னையில் வருகிற 8ம் தேதி 3,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றும் கூறினார்.

    English summary
    Agni Natchatram Tamil Nadu Heat wave: (அக்னி நட்சத்திரம் ஆரம்பம் மா.சுப்ரமணியன் பேட்டி)Tamil Nadu Health Minister Ma. Subramaniam asked to drink more water whether he is thirsty or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X