சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அக்னி நட்சத்திரம் இன்றுடன் ஓய்வு பெறுகிறது.. இந்த "2 நாளைக்கு" வார்னிங் தந்த ஆய்வு மையம்.. என்னாச்சு

இன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம் என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தையே மிரட்டி கொண்டிருந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது.. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.. எனினும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    இன்றுடன் நிறைவடையும் அக்னி நட்சத்திரம்... படிப்படியாக குறையும் வெப்பம்!

    தமிழகத்தில் இந்த வருடம் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெயில் வாட்டி வந்தது...

    மார்ச் இறுதியில் இருந்தே வெயில் கொளுத்த தொடங்கியது.

    கதற விடும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,309,337 பேர் பலி.. 530,776,205 பேருக்கு பாதிப்புகதற விடும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,309,337 பேர் பலி.. 530,776,205 பேருக்கு பாதிப்பு

    வெயிலின் தாக்கம் மிகமிக அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது... கடந்த 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இதன் தாக்கம் மேலும் கடுமையாகும் என்று எச்சரிக்கப்பட்டது..

    கத்தரி வெயில்

    கத்தரி வெயில்

    ஆனால், கத்திரி வெயில் தொடங்கியதுமே தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. இது மக்களை சற்றே மகிழ்ச்சி அடைய செய்தது.. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மிதமான வெப்பநிலை பதிவானது... அதேநேரம், மத்திய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், வெயில் தீவிரம் காட்டியது ஆனால் எதிர்பாராத விதமாக, அசானி புயல் உருவானதைத் தொடர்ந்து, அதன் தாக்கத்தால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    அக்னி நட்சத்திரம்

    அக்னி நட்சத்திரம்

    இதனால், கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் காலத்திலும் குளுமையான சூழல் நிலவியது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது.. சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில், வெயில் உக்கிரம் காட்டுகிறது.. குறிப்பாக, சென்னை, புதுச்சேரி உட்பட 10 இடங்களில், நேற்றும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து 4வது நாளாக சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவு எட்டியது குறிப்பிடத்தக்கது.

    கொளுத்திய வெயில்

    கொளுத்திய வெயில்

    சென்னையில் அதிகபட்சமாக கடந்த 23 மற்றும் 24ந்தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது.. இந்த 24ம் தேதி மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது.. சென்னை, மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் பதிவானது. 25ஆம் தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரியும், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

    இன்றுடன் முடிகிறது

    இன்றுடன் முடிகிறது

    நேற்றைய தினம் வரை இந்த வெயிலின் தாக்கம் முடிவடையவில்லை.. சென்னை மீனம்பாக்கத்தில் 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருக்கிறது... இந்நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது.. இத்தனை காலமும் வாட்டி வந்த கத்திரி வெயில் முடிவடைய போகிறது என்ற நிம்மதி மக்களிடம் ஏற்பட்டாலும், அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிலும், சென்னையில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English summary
    agninatchathiram ends today and chennai record 100 degree fahrenheit yesterday also இன்றுடன் முடிகிறது அக்னி நட்சத்திரம் என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X