அக்னி குழம்பான அக்னிபாத் போராட்டம்.. பீகாரில் ரயில் சேவை நிறுத்தம்.. பாஜக தலைவர்களுக்கு பாதுகாப்பு
சென்னை: பீகாரில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அங்கு 5வது நாளாக இன்றும் இளைஞர்கள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அக்னிபாத் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின்படி "அக்னிவீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளனர். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள்.
மத்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன, வன்முறைகள் வெடித்துள்ளன.

பீகார் மோசம்
பீகாரில்தான் இந்த திட்டத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடக்கின்றன. இந்த போராட்டத்திற்கு எதிராக பீகாரில் மட்டும் 60 ரயில்கள் பெட்டிகளில் தீ வைக்கப்பட்டு உள்ளன. 10 ரயில் என்ஜின்கள் மொத்தமாக தீக்கிரையாகி உள்ளன. அதேபோல் 10 ரயில் நிலையங்கள் பீகாரில் மட்டும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளன. நாடு முழுக்க இன்று 369 ரயில்கள் ரத்தாகி உள்ளன. கடந்த 4 நாட்களாக தினமும் 300க்கும் அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

ரயில் சேவை நிறுத்தம்
பீகாரில் போராட்டம் காரணமாக இன்றிரவு 8 மணி வரை மாநிலம் முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 4 மணிக்கு நிறுத்தப்பட்ட சேவை இரவு 8 மணி வரை செயல்படாது நாளை காலை 4 மணிக்கு மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு மீண்டும் தொடங்கும் இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை மட்டுமே அங்கு தற்காலிக ரயில் சேவை இருக்கும்.

மாற்றம்
இந்த நேரத்திற்கு ஏற்றபடி ரயில் சேவை தொலைவும், பயண திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்திற்கு இடையில் பீகாரில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது. அங்கு பாஜக நிர்வாகிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. பீகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால் வீடு இந்த போராட்டத்திற்கு இடையில் தாக்குதலுக்கு உள்ளானது. அம்மாநில பாஜக அலுவலகமும் தாக்கப்பட்டது.

பாஜக ஓய் பிரிவு
இந்த நிலையில் பீகாரில் துணை முதல்வர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் என பா.ஜ.க. தலைவர்கள் 10 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக நிர்வாகிகளுக்கு மாநில ஐக்கிய ஜனதா தள அரசு பாதுகாப்பு தரவில்லை. போராட்டத்தை கட்டுப்படுத்த நிதிஷ் குமார் அரசு தவறிவிட்டதாக கூட்டணியில் இருக்கும் பாஜக குற்றச்சாட்டு வைத்தது. இந்த நிலையில்தான் பாஜக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அங்கு பா.ஜ.க. தலைவர்கள் 10 பேருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications