எடப்பாடியால் தான் சிவி சண்முகமே வெற்றி பெற்றார்! மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என சிவி சண்முகத்திற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதில் தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்திய போது சிவி சண்முகம் ஏன் வரவில்லை எனவும், 1996 ஆம் ஆண்டும் அம்மா இருந்த போது 4 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது, ஆனால் மீண்டு வரவில்லையா? எனவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவல் நீக்கப்பட்டவர் தான் சிவி சண்முகம். அவருக்கு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் வாய்ப்பளித்தார். எடப்பாடியால் தான் சிவி சண்முகம் வெற்றி பெற்றார். திமுகவுடன் அதிமுக பேசவில்லை என சத்தியம் செய்ய முடியும். விழுப்புரத்தில் சிவி சண்முகம் முன்பு தோல்வியை தழுவ என்ன காரணம்? என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பினார்.

சிவி சண்முகம் பேசியது என்ன?
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதில் சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்பட 6 பேர் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தொடர்ந்து எடப்பாடிக்கு எதிரான நிலைப்பாட்டிலே இருந்து வருகிறார்கள்.
சிவி சண்முகம் பேசுகையில், வலுவான தலைமை வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம். அவரது தலைமையில் அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை. சட்டமன்றம், நாடாளுமன்ற, உள்ளாட்சி என எந்த தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. பழனிசாமியால் தான் 47 தொகுதிகளில் அதிமுக வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். அப்போ மீதமுள்ள 187 தொகுதிகளில் அவர் செல்லாக்காசாகி விட்டாரா?.. வெற்றி பெற்றால் அவர் செல்வாக்கு, தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பா?
சத்தியம் செய்ய முடியுமா?
விழுப்புரத்தில் எனக்கு 6 தொகுதிகள் உள்ளன. அதில் 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. சொந்த மாவட்டமான சேலத்தில் 7 தொகுதியில் ஏன் அவருக்கு செல்வாக்கு இல்லை?.. தேர்தல் தோல்விக்காக எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்யுமாறு கேட்கவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று பலர் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி ராஜினாமா செய்து இருக்கிறார். உங்களை ராஜினாமா செய்ய சொல்லவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராயுங்கள் என்று தான் சொல்கிறோம்.
திருமாவளவனை முதல்வரால வேண்டும் என் மாற்று திட்டத்தை நான் கூறினேன். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் தவெகவை ஏன் நாம் ஆதரிக்கக் கூடாது என பழனிசாமியிடம் கேட்டேன். திமுக ஆதரவில் பழனிசாமி முதல்வராக முயன்றபோது, திமுகவை எதிர்க்கும் தவெகவை ஆதரிப்பதில் தவறு இல்லை. தேமுதிகவை திட்டமிட்டு வெளியேற்றினார். திமுகவுடன் கூட்டணி பேசவில்லை என்று அவர் சத்தியம் செய்ய முடியுமா?" என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
