தவெக பிரச்சார குழு ரெடி.. டீமில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன்.. விஜய் மேஜர் அறிவிப்பு!
சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தவெக தேர்தல் பிரச்சார குழுவை அமைத்தார் விஜய். தவெக பிரச்சார குழுவில் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் பங்கீடு பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தேர்தல் பிரச்சாரக் குழுவை அமைத்துள்ளார் விஜய். தவெக பிரச்சார குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரக் குழு விவரம்:
1. திரு. N.ஆனந்த்
2. திரு. ஆதவ் அர்ஜுனா B.A
3. திரு. K.A.செங்கோட்டையன்
4. திரு. A.பார்த்திபன்
5. திரு. B.ராஜ்குமார் DME
6. திரு. K.V.விஜய் தாழு
7.திரு. S.P.செல்வம் DCE
B.திரு. K.பிச்சைரத்தினம் கரிகாலன்
9. திரு. M.செரவு மைதின் (எ) நியாஸ்
10. திருமதி J.கேத்ரின் பாண்டியன் Μ.Α.. Β.Εd
— TVK Vijay (@TVKVijayHQ) January 16, 2026
மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications